ETV Bharat / state

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 96 லட்சம் மோசடி - தம்பதி கைது!

author img

By

Published : Apr 7, 2023, 10:37 PM IST

கோவை சூலூரில் ஏலச்சீட்டு நடத்தி 96 லட்சம் மோசடி செய்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

96 lakh fraud by holding auction - husband and wife arrested!..
ஏலச்சீட்டு நடத்தி 96 லட்சம் மோசடி- கணவன் மனைவி கைது!..

கோயம்புத்தூர்: சூலூர் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் குமார் (51) - சுமதி (46) தம்பதி. இவர்கள், அப்பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ முருகன் சிறுசேமிப்பு என்ற பெயரில் ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

இவர்களது ஏலச்சீட்டு நிறுவனத்தில், சூலூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் 13 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி உள்ளார். ஸ்ரீதேவியின் பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள், பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். ஸ்ரீதேவியும் தனது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு தொடர்ந்து கேட்டுள்ளார்.

பல முறை கேட்டும் அந்த தம்பதி செவி சாய்க்கவில்லை எனவே, இது குறித்து ஸ்ரீதேவி கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.

இதையும் படிங்க: ஜாதி சான்றுக்கு ரூ.300 லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு ஓராண்டு ஆண்டு சிறை!

விசாரணையில் அந்த நிறுவனத்தில் மேற்கொண்டு மைதிலி, ஜெய்சக்தி, கோவிந்தராஜ் ஆகியோரும் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் இதுபோன்று 43 பேரிடம் 96 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, ரமேஷ்குமார் மற்றும் அவரது மனைவி சுமதியை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இது தொடர்பாக ஏலச்சீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஏப்.12ம் தேதி போராட்டம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.