ETV Bharat / state

ம.நீ.ம வேட்பாளருக்கு பரிசுப் பெட்டி கொடுத்து அதிரவைத்த மூதாட்டி

author img

By

Published : Mar 30, 2019, 8:04 PM IST

கோவை: மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மூகாம்பிகைக்கு மூதாட்டி ஒருவர் பரிசுப் பெட்டியை கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

ம.நீ.ம வேட்பாளர்

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் மூகாம்பிகை என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் பொள்ளாச்சி நகர்புற பகுதியில் உள்ள மரப்பேட்டை வீதியில் டார்ச் லைட் சின்னத்துடன்அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் வாக்கு சேகரிக்கும் போது மூதாட்டி ஒருவர் திடீரென அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னமான பரிசுப் பெட்டியை அவர் கையில் கொடுத்து, இதுபோல நீங்களும் டார்ச் லைட்டை பரிசாக தருவீர்களா என்று கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்தார்.

அதற்கு இது போன்ற பரிசுகளை நம்பி உங்கள் வாக்கை வீணாக்காதீர்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும அவர் பரிசு பெட்டி சின்னத்துடன் சமூக வலைதளங்களில் வரும் புகைப்படம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி ம.நீ.ம., வேட்பாளரிடம் பரிசு பெட்டி கொடுத்த மூதாட்டி. திகைத்துபோன வேட்பாளர்.

பொள்ளாச்சி- மார்ச்- 30

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளார் மூகாம்பிகை தனது ஆதரவாளர்களுடன் பொள்ளாச்சி நகர பகுதியில் உள்ள மரப்பேட்டை வீதியில் நேற்று இரவு தனக்கென ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்துடன்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் போது மூதாட்டி ஒருவர் திடிரென அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னமான பரிசு பெட்டியை மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளார் மூகம்பிகையின் கையில் கொடுத்து இதுபோல நீங்களும் டார்ச் லைட் பரிசாக தருவீர்களா என்று கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த வேட்பாளர் இது போன்ற பாரிசுகளை நம்பி உங்கள் வாக்கை வீனாகாதீர்கள் என்று கூறிவிட்டு மீண்டும் தன் பிரசாரத்தை துவங்கினார். மேலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளார் தன் கையில் வைத்திருந்த பரிசு பெட்டியுடன் முகநூலில் பதிவேற்றம் செய்தது பொள்ளாச்சி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தனக்கு வாகனம் மூலம் பிரச்சாரம் செய்வதற்கான அனுமதி தனக்கு கிடைக்கவில்லை எனவும் ஆனால் தி.மு.க., அ.தி.மு.க., போன்ற கட்சிகள் பத்து கார்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்வதாகவும் இதை தேர்த்தால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.