ETV Bharat / state

கோவையில் தமிழ் பயின்ற மாணவர்களுக்கு தாமதமாக தொடங்கப்பட்ட நீட் தேர்வு

author img

By

Published : Sep 14, 2020, 12:59 AM IST

கோவை : தமிழ் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு வினாத்தாள் தாமதமாக அளிக்கப்பட்டதால் தேர்வானது 4 மணி அளவில் தொடங்கி ஏழு மணியளவில் முடிவடைந்தது.

கோவை நீட் தேர்வு விவகாரம்
கோவை நீட் தேர்வு விவகாரம்

சூலூர் அருகே உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வில் தமிழ் மாணவர்களுக்கு வினாத்தாள் தாமதமாக அளிக்கப்பட்டதால் தேர்வு 4 மணி அளவில் தொடங்கி ஏழு மணியளவில் முடிவடைந்தது.

இதுகுறித்து, தேர்வு எழுதிய மாணவர் கூறுகையில், முதலில் தங்களுக்கு தவறான வினாத்தாள் அளிக்கப்பட்டது. சரியான வினாத்தாள் 4 மணி அளவில் தான் அளிக்கப்பட்டது. இது தங்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

பின்னர், கொடுக்கப்பட்ட வினாத்தாள் 5 மணிக்கே வாங்கி கொள்வார்களோ என்ற பதற்றத்தில் இருந்தோம். ஆனால் 7 மணிவரை எங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் நீண்ட நேரம் காத்திருந்து தேர்வு எழுதியுள்ளோம் என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.