ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்றத் தேர்தலிலும் மாற்றம் நிகழும் - ஜே.பி. நட்டா

author img

By

Published : Dec 27, 2022, 10:27 PM IST

கோவை, காரமடை அருகே நீலகிரி நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் இக்கூட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும் - ஜேபி நட்டா
நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும் - ஜேபி நட்டா

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும் - ஜேபி நட்டா

கோவை: காரமடை அருகே பாஜக சார்பில் கோவை, நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும் - ஜேபி நட்டா
நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும் - ஜேபி நட்டா

இக்கூட்டத்தில் பேசிய ஜே.பி. நட்டா, 'தமிழகம் ஆன்மிக பூமி. பழமையான மொழி, கலாசாரம் கொண்ட நிலம். இப்பகுதி இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் மாற்றத்தை இக்கூட்டம் ஏற்படுத்தும். மோடி தலைமையிலான இந்தியா முன்னேறி வருகிறது. கரோனா, உக்ரைன் போருக்குப் பிறகு உலக நாடுகளின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்து வருகிறது.

ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகளுக்கு அதிகாரம் இந்த கட்சியிலும், ஆட்சியிலும் வழங்கப்பட்டு வருகிறது. 80 கோடி மக்கள் பயனளிக்கும் உணவு, தானியங்கள் திட்டம்‌ மூலம் ஏழை மக்கள் பசியாறி கொண்டிருக்கிறார்கள். 11 கோடி மக்களுக்கு 5 லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.

கோவை, நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் பாஜக பிரச்சார பொதுக்கூட்டம்
கோவை, நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் பாஜக பிரச்சார பொதுக்கூட்டம்

மோடி அரசு பட்டியலினம் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களை குடியரசு தலைவராக்கியுள்ளது. பட்டியலினம் மற்றும் பழங்குடியைச் சேர்ந்த பலர் மத்திய அமைச்சராக்கப்பட்டுள்ளனர். பெண்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள், இளைஞர்கள் வளர்ச்சிக்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழகம் அதிகளவிலான மருத்துவக் கல்லூரிகளை பெற்றுள்ளது. விவசாயிகள் வங்கிக் கணக்கில் 4 மாதத்திற்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. பயிர்ப் பாதுகாப்புத் திட்டம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் கோடி ரூபாயை விவசாயத் துறைக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

220 கோடி ரூபாய் தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 9 மாதத்தில் 2 தடுப்பூசிகளை இந்தியா உருவாக்கியது. 100 நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்துள்ளோம். 44 நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கியுள்ளோம்‌. பிரதமர் மோடி முயற்சியால் உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரம் இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பினர். 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு வலுவடைந்துள்ளது.

நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. ஆனால், மாநிலம் பாதுகாப்பான கைகளில் இல்லை. திமுக ஒரு குடும்ப கட்சி. திமுக என்பதற்கு வாரிசு அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து என்பது தான் விளக்கம். திமுக மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை. நமக்கு நாடு தான் முக்கியம். ஆனால், திமுகவினர் கொள்ளையடிக்க கட்சி நடத்துகிறார்கள். குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறார்கள். திமுகவில் சுயநலன் தான் முதலில் இருக்கும். பிறகு கட்சி, கடைசியாக நாடு என இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும் - ஜேபி நட்டா
நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும் - ஜேபி நட்டா

ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரை என நாட்டை பிளவுப்படுத்துவர்களுடன் நடந்து கொண்டிருக்கிறார். நாம் ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறோம். அவர்கள் பிரிவினையைத் தூண்டுகிறார்கள். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை பிரதமர் மோடி ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைத்துள்ளார்.

திமுக, கருணாநிதி & சன்ஸ்க்கான கட்சி. காங்கிரஸ், காந்தி & சன்ஸ்க்கான கட்சி. அடுத்த முறை நான் வரும் போது நீலகிரியில் தாமரை மலர்ந்திருக்கும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஜே.பி. நட்டாவின் பயணம் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சியாக அமையும்' - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.