ETV Bharat / state

வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ்ஸை சந்திப்பேன் - டிடிவி தினகரன்

author img

By

Published : Dec 14, 2022, 4:41 PM IST

வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ்ஸை சந்திப்பேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ்சை சந்திப்பேன்.. டிடிவி தினகரன்
வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ்சை சந்திப்பேன்.. டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோவை ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டிடிவி தினகரன், கட்சிக் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “அடுத்த முதலமைச்சர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஆட்சியை ஏன் திமுகவிற்கு அளித்தோம் என்ற வருத்தத்தில் மக்கள் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக ஏன் ஆக்கினார்கள்? என பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். பழனிசாமி கம்பெனி செய்த தவறுகளை உணர்ந்துள்ளது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறேன். சுயநலத்தாலும் பதவி வெறியாலும் ஒரு சமூகத்திற்கு மட்டுமான கட்சியாக சிலர் மாற்றியுள்ளனர்.

கோவை ராமநாதபுரத்தில் நடைபெற்ற டிடிவி தினகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
கோவை ராமநாதபுரத்தில் நடைபெற்ற டிடிவி தினகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டு வந்து, ஜெயலலிதாவின் ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தரும் என அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தங்கள் மீது வழக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தாலும், தாங்கள் இருக்கின்றோம் என்பதை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதாலும்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே தவிர, மக்களின் மீதுள்ள நல்லெண்ணத்தால் எல்லாம் கிடையாது.

வாய்ப்பு கிடைத்தால் பன்னீர்செல்வத்தை சந்திப்பேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால் திமுகவை வீழ்த்த முடியும். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து சில மாதங்களில் தெரிய வரும்” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கோவை மாவட்ட அமமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: உதயநிதிக்கு அமைச்சர் பதவி ; 'ஸ்டாலினின் இந்த அவசரம் ஏன்..?' - டிடிவி தினகரன் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.