ETV Bharat / state

இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல்; கோவையில் கடை அடைப்பு

author img

By

Published : Mar 6, 2020, 12:11 PM IST

கோயம்புத்தூர்: நஞ்சுண்டாபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டதைக் கண்டித்து சோமனூர், கருமத்தம்பட்டி பகுதிகளில் கடை அடைப்பு போராட்டத்தை நடத்தினர்.

கடையடைப்பு போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர்
கடையடைப்பு போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர்

கோயம்புத்தூர் நஞ்சுண்டாபுரம் பகுதியில் கடந்த மார்ச் 4ஆம் தேதி இரவு இந்து முன்னணியின் அமைப்பாளர் ஆனந்த் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.

அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆனந்தை தாக்கியவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அறிவித்தபடி கோவை மாவட்டம் சோமனூர், கருமத்தம்பட்டி பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், பேக்கரிகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடையடைப்பு போராட்டம்

இதுகுறித்து இந்து முன்னணி கூறுகையில், ஆனந்த் தாக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி, உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதாகவும், இதில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறினர்.

இதையும் படிங்க: இந்து முன்னணியை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் நாளை கடையடைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.