ETV Bharat / state

'நமது நிலம் நமதே' - அன்னூரில் சிப்காட்டுக்கு எதிராக விவசாயிகள் குரல்

author img

By

Published : Nov 21, 2022, 4:09 PM IST

அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தாலுகா அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்டப்போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

கோவை வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூர் சிட்கோ அமைப்பதற்காக 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து ’நமது நிலம் நமதே’ என்ற பெயரில் போராட்டக்குழு ஒன்றைத்தொடங்கினர்.

இவ்வமைப்பின் சார்பில், அன்னூரை அடுத்துள்ள குழியூரில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தி, இருசக்கர வாகனங்களில் பேரணி நடத்தினர். இதன்தொடர்ச்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாய நிலங்கள் அதிகம் உள்ள அன்னூர் சுற்றுவட்டாரத்தில் சிப்காட் அமைக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளும் பங்கேற்று சிப்காட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். விவசாயிகள் போராட்டம் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் தாலுகா அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சுமை தூக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள்; போராட்டத்தில் குதித்த பணியாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.