ETV Bharat / state

Editor Lenin: ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு மானியம்; அரசுக்கு எடிட்டர் லெனின் கோரிக்கை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 10:46 PM IST

ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றுக்கு ஊக்கத்தொகை வழங்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனரும் எடிட்டருமான லெனின் கோரிக்கை விடுத்துள்ளார்.

editor lenin request tn government give subsidy for documentary movie makers to encourage
இயக்குநர் லெனின் "சிற்பிகளின் சிற்பங்கள்"

கோயம்புத்தூர்: கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு, 69-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதில் பிரபல எடிட்டரும் - இயக்குனருமான பி.லெனின் இயக்கத்தில் உருவான ஆவணப் படமான "சிற்பிகளின் சிற்பங்கள்" சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்வி மற்றும் அதை கற்று கொடுக்கும் ஆசிரியர்களைக் கவுரவிக்கும் விதமாக உருவாகியுள்ள "சிற்பிகளின் சிற்பங்கள்" என்ற ஆவணப் படத்தின் இயக்குநர் லெனினுக்கு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோவை கிளஸ்டர் ஸ்டுடியோ அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர், இயக்குநர் பி.லெனின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமக்கு தெரிந்த ஒருவர் சிறுவயதில் படித்த காலத்தில், நன்றாக பாடம் நடத்தி சிறந்த ஆளாக்கிய ஆசிரியர் பற்றி ஒரு டாக்குமென்டரி எடுக்க கேட்டுக் கொண்டதற்கிணங்க எடுக்கப்பட்டது தான் ‘சிற்பிகளின் சிற்பங்கள்’. வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசிரியர் சிறந்த நிலையில் அவரவரின் வாழ்வில் இருப்பார்கள். அவர்களை எல்லாம் நேரில் சந்தித்து ஒரு தொகுப்பாக ஆவணமாக்கப்பட்டுள்ளது இந்த "சிற்பிகளின் சிற்பங்கள்"ஆவணப் படம்.

இதையும் படிங்க: தமிழ் சினிமா கொண்டாடிய சிறந்த ஆசிரியர்கள்.. ஆசிரியர் தின சிறப்பு தொகுப்பு!

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கம் முன்னர், பாலர் அரங்கம் என அழைக்கப்பட்டது. அதில் முழுவதும் இலவசமாக குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தற்போது அதேபோல் தமிழக அரசு குழந்தைகளுக்கான திரைப்படங்களைத் திரையிட முன் வர வேண்டும்" என தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். “குறிப்பாக இந்தியாவில் அதிக குறும்படங்கள் தமிழகத்தில் தான் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றை எடுக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறிய ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இதனைத் தவிர்த்து இளைஞர்கள் மட்டுமின்றி ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களில் அதீத நாட்டம் கொண்ட குழந்தைகளும் அதிகளவில் உள்ளனர். அப்படி விருப்பமுள்ள குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், குழந்தைகளுக்கான தனிப்படங்கள், மற்றும் குழந்தைகளே எழுதும் படங்களைச் சிறப்பாகத் தயாரிக்க மானியம் கொடுக்க முன்வரவேண்டும்" எனக் கேட்டு கொண்டார்.

இதையும் படிங்க: கிராமத்து காமெடியில் களமிறங்கும் யோகி பாபு.. "காவல்துறை உங்கள் நண்பன்" கதாநாயகனுடன் கூட்டணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.