ETV Bharat / state

அதிமுக - பாஐகவின் "பி" அணியாக செயல்படுகிறது - சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்...

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 10:36 PM IST

CPIM State Committee Meeting: 5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் INDIA கூட்டணி வெற்றியைக் காட்டுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேட்டி அளித்து உள்ளார்.

CPIM State Committee Meeting at Coimbatore sitaram yechury and Balakrishnan byte
அதிமுக - பாஐகவின் "பி" அணியாக செயல்படுகிறது - சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்...

தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேட்டி

கோயம்புத்தூர் : கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் காந்திபுரம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. 2வது நாளான இன்று (டிசம்பர். 1) அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறும் போது, "5 மாநில தேர்தலுக்குப் பின்பு கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 40,000 கார்ப்ரேட் நிறுவனங்கள் வரி செலுத்தவில்லை மேலும் இந்த நிறுவனங்கள் தங்கள் பணிகளையும் நிறுத்தியுள்ளது. வேலையிழப்பு அதிகளவில் இந்தியாவில் உள்ளது. பணவீக்கம் அதிகமாக உள்ளது. 58% இந்தியர்கள் சொந்தமாகப் பணி செய்பவர்களாக உள்ளனர் என ஆய்வு சொல்கிறது ஆனால் உண்மையில் வேலையின்மை இந்தியாவில் நிலவுகிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த பிரச்சனை பிரதிபலிக்கும்.

பாஜக ஆட்சியில் பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் தாக்கப்படுகின்றனர். மாநில அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது. ஜி20 மாநாடு இந்தியா தலைமை வகிப்பதாக, முன்னிலை வகிப்பதாகப் பிம்பம் உருவாக்கப்பட்டது. ஜி20யில் இந்தியா 20வது இடத்தில் உள்ளது. மிகவும் தீவிரமான பிரச்சனை இந்தியாவில் நிலவி வருகிறது. இந்திய மக்களுக்காகவும், இந்தியாவிற்காக பாஜக வீழ்த்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

5 மாநில தேர்தல் முடிந்தவுடன், தமிழகத்தில் கூட்டணி பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கப்படும் எல்லா கருத்துக் கணிப்பு முடிவுகளும் பா.ஜ.கவிற்கு சாதகமாக இல்லை, சில மாநிலங்கள் சாதகமாக இருக்கின்றது. சில மாநிலங்களில் சாதகமற்ற நிலை இருக்கின்றது. இந்தியா கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கின்றதா? என்ற கேள்விக்கு இல்லை, திமுக கூட்டணியில் இருக்கின்றோம்.

INDIA கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம். ED, CBI போன்றவை மிரட்டலுக்கு மத்திய அரசு பயன்படுத்தப்படுகின்றது. 8 மசோதாக்களை 3 ஆண்டுகளாகக் கேரளா ஆளுநர் நிறுத்தி வைத்திருக்கின்றார். ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகின்றது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அந்த நெருக்கடி இருப்பதில்லை, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு நடத்த வேண்டும்." என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆளுநரும், முதலமைச்சரும் அமர்ந்து பேச வேண்டும்: மசோதாக்கள் நிலுவை வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!

இதனை தொடர்ந்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும் போது, "பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டதாக சொல்லப்பட்டாலும், அதிமுக பா.ஜ.கவின் "பி" டீமாக செயல்படுகின்றது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த அளவு கிடைத்த அளவு வெற்றி கூட இந்த முறை அதிமுகவால் பெற முடியாது. சிறுபான்மையினரின் காவலர் எனக் கூறும் அதிமுக, "முத்தலாக், சிஏஏ, காஷ்மீர் விவகாரங்கள் வந்த போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத கட்சிதான் அதிமுக, இப்போது சிறுபான்மை மக்களுடன் இருப்பதாகக் காட்டுகின்றது.

பா.ஜ.க, அதிமுக எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் எடுபடாது. சிறுபான்மை இன மக்கள் இவர்களை நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலின் போது கோவை உட்பட ஏற்கனவே இருக்கும் இரு தொகுதிகளையும், கூடுதலான தொகுதிகளையும் கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் கேட்போம், தொகுதி உடன்பாடு சுமுகமாக நடைபெறும். அதில், பிரச்சனை ஏற்படும் எனச் சிலர் நினைக்கின்றனர் அது நடக்காது.

உண்மைக்கு மாறான விடயங்களைப் பிரதமர் மோடி துவங்கி அண்ணாமலை வரை அனைவரும் பேசுகின்றனர். அண்ணாமலை மூளைக்கு எதுவும் தெரியாது எனவும் காட்டமாக விமர்சனம் செய்தார். பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலம் காவிரி டெல்டா பகுதி என்பது பற்றி ஞானமே இல்லை, ஞானசூனியமாக இருக்கின்றார். தமிழக வளர்ச்சிக்கு யார் அதிகம் இருந்திருக்கின்றனர், கம்யூனிஸ்ட்டுகளா, பா.ஜ.கவா, ஜனசங்கமா எனப் பகிரங்கமாக விவாதிக்கத் தயார். தமிழக அரசு மின் கட்டண உயர்வைக் கைவிட வேண்டும். தொழில்கள் வேறு பல மாநிலங்களுக்கு இடம் மாறும் நிலை இருக்கிறது. சிறு குறு தொழில் முனைவோரிடம் பேச்சு நடத்தி தொழில் கடன்கள் வழங்கி அவர்கள் தொழில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போடக்கூடாது என்பதை உடனே வலியுறுத்தினோம், அருண் என்கிற விவசாய போராட்டத்தை ஒருங்கிணைந்த நபர் மீது போடப்பட்ட வழக்கையும் திரும்பப் பெற வேண்டும். மேலும், திமுக கொடுத்து இருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து ஊழியர் சம்பள விவகாரம், பழைய ஓய்வூதியம் போன்றவை நிறைவேற்றப்பட வேண்டும் மதுரை, கோவை நாடாளுமன்றத் தொகுதிகளைக் கண்டிப்பாக சிபிஎம் கட்சிக்குக் கேட்போம். தொழில் துறையினருக்கு மின்கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திண்டுக்கல் மருத்துவரிடம் ரூ.20 லட்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.