ETV Bharat / state

ரயில் தவறி விழ இருந்த பயணியை காப்பாற்றிய தலைமை காவலருக்கு பாராட்டு

author img

By

Published : Nov 28, 2019, 7:36 PM IST

கோவை: மங்களூரு ரயிலில் இருந்து தவறி விழ இருந்த பயணியை பாத்திரமாக காப்பாற்றிய காவலரை ரயில் நிலைய இயக்குநர் பராட்டி பரிசளித்தார்.

Congratulations to the Chief of Police
தலைமை காவலருக்கு பாராட்டு

கோவையில் இருந்து மங்களூருவுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வழக்கம்போல் இன்று காலை 6.40மணிக்கு நடைமேடை 3இல் இருந்து புறப்பட்டது.

இந்த ரயிலில் மங்களூரு செல்ல தம்பதிகள் தங்களது பிள்ளையுடன் ஓடும் ரயில் ஏற முயன்றனர். அப்போது கணவன், மகன் முதலில் ஏறிய நிலையில், பெண் பயணி மட்டும் தவறி விழும் நிலையில் இருந்தார். இதைப் பார்த்த ரயில்வே தலைமை காவலர் பாலகிருஷ்ணன் கண நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அவரை ரயில்பெட்டியின் உள்ளே ஏற்றினார்.

பெண் பயணியை காப்பாற்றும் தலைமை காவலர்
இந்த காட்சி ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதையறிந்த கோவை ரயில் நிலைய இயக்குனர், தலைமை காவலர் பாலகிருஷ்ணனின் துரிதமாக செயல்பட்டு, பெண்மணியை காப்பாற்றியதை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், வெகுமதியும் வழங்கினார்.

இதையும் படிங்க:குன்னூர், மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மீண்டும் மண் சரிவு

Intro:கோவை மங்களூர் ரயிலில் இருந்து , தவறி விழ இருந்த பயணியை , பாத்திரமாக ஏற்றி விட்ட காவலரை பாராட்டி பரிசளித்த நிலைய இயக்குனர்Body:கோவையில் இருந்து மங்களூர் செல்லும், கோவை - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை கோவை ரயில் நிலையம் நடைமேடை எண் 3 ல் இருந்து , காலை 6.40 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட ரயிலில் மங்களூர் செல்ல வந்த கனவன், மனைவி , மகன் , என குடும்பத்தினர் , ஓடும் ரயிலில் பைகளுடன் ஏற முயன்றனர். அப்போது கணவன் மற்றும் மகன் ஏறிய நிலையிக் பின்னால் பைகளுடன் ரயிலில் ஏறிய போது தவறி விழ இருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே தலைமை காவலர் பாலகிருஷ்ணன் அவரை தாங்கி பிடித்து , ரயில் பெட்டியில் பத்திரமாக அனுப்பி வைத்தார். இந்த காட்சிகள் ரயில் நிலைய சி.சி.டி.வி கேமராவில் பதிவானது. இதனையடுத்து கோவை ரயில் நிலைய இயக்குனர் , தலைமை காவலர் பாலகிருஷ்ணனின் துரிதமாக செயல்பட்டு , பெண்மணியை காப்பாற்றியதற்காக பாராட்டி சான்றிதழ் மற்றும் 500 ரூபாய் வெகுமதியை வழங்கினார். இதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் அவரை பாராட்டினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.