ETV Bharat / state

முதலமைச்சரின் தோல்வி பயமே குடியரசுத்தலைவரிடம் புகார் அளிக்க காரணம் - அண்ணாமலை

author img

By

Published : Jul 10, 2023, 1:12 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி பயத்தால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் அளித்துள்ளார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

bjp annamalai press meet at coimbatore
ஆளுநர் அரசியல் பேசக்கூடாது,கருத்து தெரிவிக்கலாம் என அண்ணாமலை பேட்டி

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, கருத்து தெரிவிக்கலாம் என அண்ணாமலை பேட்டி

கோயம்புத்தூர்: சென்னையில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது தமிழக முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது, "முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணாடியில் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாத பிரச்னைகளுக்கு எல்லாம் ஆளுநர் தான் காரணம் என அவரது கடிதம் இருக்கிறது. தமிழகத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன.

திமுக செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவு இருக்கிறது. நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இவற்றை விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப் பார்க்கின்றனர்'' எனப் பதில் அளித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை பாதுகாப்பது ஏன்? : ''ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கியது தவறு என்று சொல்கின்றனர்.செந்தில் பாலாஜியை இவ்வளவு பாதுகாப்பதற்குக் காரணம் என்ன, அந்த விஷயத்தை விவாதிக்க நேரம் இருக்கிறது. அதே வேளையில் எதற்காக முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது ஆளுநரிடம் அமைச்சர்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்?'' எனக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது - அண்ணாமலை விமர்சனம்

ஆளுநர் மீது குற்றச்சாட்டு: ''செந்தில் பாலாஜி ஒரு உத்தமராகவும், மாநிலத்தைக் காக்க வந்த சேவகர் என்ற விதமாக அந்தக் கடிதத்தை அனுப்பி இருக்கின்றனர். தன்னுடைய கட்சி செய்யக்கூடிய தவறுகளை மறைக்க ஆளுநர் மீது குற்றச்சாட்டுகளை கூறுவதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்? கள்ளச்சாராய சாவு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என ஏராளமான பிரச்னைகள் இருக்கும்பொழுது ஆளுநர் மீது அனைத்து பழிகளும் போடப்படுகிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய திமுக எம்.பி.,எம்.எல்.ஏக்கள் ஆளுநரின் மாண்புக்கு உரிய வகையில் அவரை பேசுவதே இல்லை. இவர்கள் கொடுப்பதை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை. ஆளுநர் அப்படி படிக்க வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டத்தை சொல்லி இருக்க வேண்டும். எங்கெல்லாம் பொய் இருக்கிறதோ அதையெல்லாம் ஆளுநர் படிக்காமல் இருந்திருக்கின்றார். திமுக சொல்வதை எல்லாம் ஆளுநர் சொல்ல முடியாது'' என்றார்

முதலமைச்சருக்கு தேர்தல் பயம்: ''வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். முதலமைச்சரின் கடிதத்தில் அவரது இயலாமை தான் வெளிப்படுகிறது'' எனக் குறிப்பிட்டார்

''சிதம்பரம் குழந்தைகள் விவகாரத்தில் ஆளுநர் மீது எப்படி வழக்கு செய்ய முடியும்? தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரித்து ஒரு அறிக்கை கொடுத்து இருக்கிறது. தேசிய குழந்தைகள் ஆணையம் சொல்வது தவறா? காவல்துறை சொல்வது தவறா? என்பதுதான் விவாதமே தவிர, ஆளுநர் எப்படி இதற்கு பொறுப்பாவார்.

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, கருத்து தெரிவிக்கலாம்: ஆளுநருக்கு ஜியு போப் திருக்குறளை மொழி மாற்றம் செய்ததில் மாறுபட்ட கருத்து இருக்கிறது. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆனால், ஜியு போப் குறித்து சொந்த கருத்தை சொல்லி இருக்கின்றார். கலாசாரத்தைப் பற்றி, பண்பாட்டைப் பற்றி ஆளுநருக்கு பேச உரிமை இருக்கிறது'' என்றார்

''முதலமைச்சர் எழுதிய கடிதம் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. தோல்வி பயத்தைக் காட்டும் விதமாகவே அவரது கடிதம் இருக்கிறது. தமிழகத்தின் உண்மையான நிலையை பிரதிபலிக்கும் விதமாக முதலமைச்சரின் கடிதம் இல்லை'' என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ ஐய்யப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.