ETV Bharat / state

"ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வேன்" - சாதனை மங்கை வித்யா ராம்ராஜ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 2:51 PM IST

ஆசிய விளையாட்டில் மூன்று பதக்கம் வென்ற தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் ஈ.டிவி பாரத் செய்தியாளர் ஆ.கிறிஸ்டோபருடன் கலந்துரையாடியது குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தித் தொகுப்பு...

ETv Bharat
ETv Bharat

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ஐதராபாத் : 19வது ஆசிய விளையாட்டு தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. நடப்பு சீசனில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 107 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

நடப்பு ஆசிய விளையாட்டில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் தடகளம் பிரிவில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலமும், 4X400 மகளிர் தொடர் ஓட்டம் மற்றும் 4X400 மீட்டர் கலப்பு பிரிவு தொடர் ஓட்டத்தில் தலா ஒரு வெள்ளி பதக்கமும் வென்றார். நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் அதிக பதக்கங்கள் வென்ற தமிழக வீராங்கனை என்ற சாதனைக்கும் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் சொந்தக்காரர் ஆனார்.

ஆசிய விளையாட்டை மட்டும் தனது இலக்காக நிர்ணயிக்காமல் ஒலிம்பிக் போட்டியில் பதக்க வெல்வதையே தனது கனவாக கொண்டு இருக்கும் வித்யா ராம்ராஜ், தனது சகோதரி நித்யா ராம்ராஜூடன் ஈ.டிவி பாரத்திற்கு பிரத்யே பேட்டி அளித்தார். அப்போது, "ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தேவையான தனது அடுத்தடுத்த இலக்கு மற்றும் முயற்சிகள் குறித்து வித்யா ராம்ராஜ் கூறுகையில், "வரும் 26ஆம் தேதியில் கோவாவில் தேசிய விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. அந்த விளையாட்டு தொடரில் பங்கேற்க உள்ளோம். அந்த தொடரில் இன்னும் அதிக முயற்சிகளை மேற்கொண்டு குறுகிய நேரத்தில் எங்களது இலக்கை அடைய முயற்சிப்போம்.

கடந்த கரோனா காலக்கட்டத்தில் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு நித்யா விளையாட்டை விட்டு விக்கிக் கொண்டார். மீண்டும் தடகள போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் தான் நித்யா இருந்தார். ஆனால் எங்களது பயிற்சியாளர் தான் அவளுக்கு ஊக்கம் அளித்து மீண்டும் போட்டிகளில் பங்கேற்க வைத்தார்.

உலக தரவரிசையில் முதல் 40 இடங்களில் இடம் பெறும் வீரர், வீராங்கனைகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவர். சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்படும் போது அதில் கிடைக்கும் புள்ளிகளை கொண்டு உலக தரவரிசையில் மதிப்பீடுகள் உயர்ந்து தரவரிசையும் உயரும். அதேநேரம், மற்றொரு வாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடக்கும் பட்சத்தில் அதன் மூலமாகவும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஏற்ற வகையில் அதன் இலக்கு மாறுபடும். நிர்ணயிக்கப்பட்ட அந்த இலக்கை அடையும் பட்சத்தில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளலாம். உள்ளூர் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது குறிப்பிட்ட அளவிலான புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அதேநேரம் வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு அதில் பட்டம் வெல்லும் போது, அங்கு வழங்கப்படும் தர மதிப்பீடுகள் என்பது உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

எனவே தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் போது உள்ளூர் போட்டிகளை காட்டிலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் வெல்வதையே இலக்காக கொண்டு இருக்க வேண்டும். அது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள பெரும் உதவியாக இருக்கும். விளையாட்டில் வயது வித்தியாசம் கருதாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள், குழந்தை பிறந்து விட்டது என்ற எண்ண ஓட்டட்தில் இருக்கக் கூடாது.

குழந்தை பிறந்தும் கூட பல வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று உள்ளனர். எதையும் செய்து காட்ட முடியும் என அனைவரும் நினைக்க வேண்டும். எரிமலையையும் தொட முடியும் என்று நினைத்தால் அதையும் நாம் செய்து காட்ட முடியும். அதனால் நம்பிக்கையை கைவிடாமல் இருக்க வேண்டும். அடுத்தவர்கள் மீது கொள்ளும் நம்பிக்கையை நம்மீது கொள்ளும் போது அடுத்த கட்டத்திற்கு நாம் சென்று கொண்டே இருக்க முடியும்.

25 வயது கடந்து விட்ட நிலையில் பலர் திருமணம் குறித்தும் தற்போது தான் பதக்கம் வென்று இருக்கிறீர்களா என்று எங்களிடம் கேட்கின்றனர். எங்களை பொறுத்தவரை வயது என்பது கிடையாது. ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதையே குறிக்கோளாக வைத்து இருக்கிறோம். அதை செய்து காட்டும் வரை முயற்சித்து கொண்டே இருப்போம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : World Cup Cricket 2023: நாக் அவுட் சுற்றில் தடுமாற்றம்.. அவசரமா? பதற்றமா?! தொடரும் சஞ்சு சாம்சன் சர்ச்சை! - சடகோபன் ரமேஷ் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.