ETV Bharat / state

கஞ்சா வழக்கில் கைது - பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி கொடுமை செய்த போலீசார்!

author img

By

Published : Dec 5, 2019, 1:59 PM IST

கோவை: கஞ்சா வழக்கில் கைது செய்து, பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி கொடுமை படுத்தியதாகப் பாதிக்கப்பட்ட இளைஞர் மேற்கு மண்டல தலைவர்(ஐ.ஜி) பெரியய்யாவிடம் புகார் அளித்துள்ளார்.

பிறப்புறுப்பில்  ஆசிட் ஊற்றி காவல் துறையினர் கொடுமை
பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி காவல் துறையினர் கொடுமை

நீலகிரி மாவட்டம் தேவாலாப் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் திருப்பூரில் கைத்தறி வேலை செய்து வருகிறார்.

கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தீபாவளிக்காக பந்தலூரில் உள்ள மனைவி, குழந்தையைப் பார்க்க ஆட்டோவில் சென்ற சிவராஜை கஞ்சா வைத்திருப்பதாக காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்து பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி கொடுமைப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து சிறையில் அடைப்பதற்கு முன் அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோரிடம் காயம் குறித்து எதுவும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர்.

பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி காவல் துறையினர் கொடுமை

இந்நிலையில் நேற்று பிணையில் வெளியே வந்த சிவராஜ் கோவை மேற்கு மண்டல தலைவர்(ஐ.ஜி) பெரியய்யாவைச் சந்தித்து புகார் அளித்தார்.

இதையும் படிங்க: நிற்கமால் சென்ற ஷேர் ஆட்டோ; துரத்திய காவல் துறை... பெண் பயணி படுகாயம்!

Intro:கஞ்சா வழக்கில் கைதானவரை ஆசிட் ஊற்றி கொடுமை செய்த காவல் துறையினர்.Body:நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். திருப்பூரில் வேலை செய்த்ய் வருகிறார்.

அக்டோபர் 27ல் தீபாவளிக்காக பந்தலூரில் உள்ள மனைவி மற்றும் குழந்தையை பார்க்க ஆட்டோவில் சென்ற போது சிவராஜ் கஞ்சா வைத்திருப்பதாக கூறி கைது சென்றுள்ளனர்.

அவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து அவர் வயிற்று பகுதி தொடை பகுதியில் ஆசிட் ஊற்றி கொடுமை படுத்தியுள்ளனர். மேலும் அவரை கோவை மத்திய சிறைக்கு அழைத்து வர காவல் துறை வாகனத்தை உபயோகப்படுத்தாமல் தனியார் வாடகை காரில் அழைத்து வந்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சிறையில் அடைப்பதற்கு முன் அதிகாரியிடமும் மருத்துவரிடமும் காயம் குறித்து ஏதும் சொல்ல கூடாது என மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஜாமீனில் வெளிவந்த சிவராஜ் இந்த சம்பவத்தை குறித்து மேற்கு மண்டல தலைவர்(ஐ.ஜி) பெரியய்யா அவர்களை சந்தித்து புகார் அளிக்க அவர் குடும்பத்தினர் கூறினர்.

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் தன்னையும் ஆட்டோ ஓட்டுனரையும் கைது செய்து என்னை கஞ்சாவுடன் பிடித்தனர் என்றும் காவல் நிலையத்தில் தன் மீது வயிற்று பகுதி ஆணுறுப்பு, தொடைகளில் ஆசிட் ஊற்றி கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார். இதனால் வயிற்று வலி, அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய சிவராஜின் தாயார் கலா சிவராஜை காவல் துறையினர் பெரும் கொடுமை செய்ததாகவும் அவரை தனியார் வாகனத்தில் அழைத்து வந்ததற்கு காசு தான் தான் கொடுத்ததாகவும் தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.