ETV Bharat / state

''கோவையில் தான் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடக்கிறது'' - தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம்

author img

By

Published : Apr 6, 2023, 4:41 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகளவு குழந்தைத் திருமணம் நடப்பதாகவும், விரைவில் குழந்தைகள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க பெஞ்ச் அமைக்கப்படும் எனவும் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் கோவையில் ஆய்வு

கோயம்புத்தூர் மாவட்டம், அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை வடக்கு தாசில்தார் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த், “தமிழ்நாடு உட்பட ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வுமேற்கொண்டோம். மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் ஐந்து மாநிலங்களில் 21 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

கோயம்புத்தூரில் கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து கூர்நோக்கு இல்லங்களையும் செயலி (app) மூலம் கண்காணிக்கிறது. இதுவரை 14 இடங்களில் ஆய்வு நடந்து முடிந்தன. அடுத்ததாக தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். கோயம்புத்தூரைப் பொறுத்தவரை கூர்நோக்கு இல்லம் சிறப்பாக உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட காவல் துறை ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற தலைப்பில் மாணவர்களை நேரில் சந்தித்து வருகின்றனர்.
கோவையில் தான் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடக்கிறது. இந்த தகவல் வெளிவரக் காரணம் ரெக்கார்டு அதிகளவில் ஆகிறது என்பது தான். இதுவரை 250 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு விரைவில் குழந்தைகள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க பெஞ்ச் அமைக்கிறோம். நீட் தொடர்பாக ஒரு மாணவி ரயில் முன் பலியானதாக செய்தி வந்தது. நீட் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

படிக்கும் போது மாணவரின் மனச்சோர்வு என்ன என்பது தெரியும். தேர்வு என்பது முக்கியம். பிரதமர் பரீட்சைக்கு பயமேன் என நிகழ்வு நடத்துகிறார். நீட் மாற்ற முடியாத ஒன்று என உறுதி செய்துவிட்டனர். சமூக விரோத கும்பல் நீட்டை மாற்றி மாற்றி சொல்கின்றனர்.

தமிழ்நாடு அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையத்தின் சார்பில் ரயில் முன் பாய்ந்த பெண்ணுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக்கொள்கிறேன். சில இடங்களில் மதமாற்றம் மற்றும் போதைப்பொருள் புகார்கள் அதிகம் வருகிறது. ஆனால், கோயம்புத்தூரில் அது போன்று இல்லை. குழப்பமான மனநிலையினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.

மேலும், கோயம்புத்தூரில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் 4 ஆலோசகர்கள் உள்ளனர். நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் இணைந்த இந்த கூர் நோக்கு இல்ல அறிக்கையை நாங்கள் கடிதம் மூலமாக ஆட்சியருக்கு பின்னர் தருவோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தம்பி மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டீங்க.. வேலை செய்த கடையில் திருடிய வடமாநில இளைஞர் வசமாக சிக்கிய சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.