ETV Bharat / state

மலேசியாவில் இருந்து சென்னைக்கு 23 பாம்புகளை கடத்தி வந்த பெண் பயணி! அதிர்ந்து போன அதிகாரிகள்

author img

By

Published : Apr 30, 2023, 9:05 AM IST

மலேசிய நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், கொடிய விஷம் உடைய 23 பாம்புகளை, இரண்டு கூடைகளுக்குள் வைத்து கடத்தி வந்த பெண் பயணியை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

மலேசியாவில் இருந்து சென்னைக்கு 23 பாம்புகளை கடத்தி வந்த பெண் பயணி! அதிர்ந்து போன அதிகாரிகள்
மலேசியாவில் இருந்து சென்னைக்கு 23 பாம்புகளை கடத்தி வந்த பெண் பயணி! அதிர்ந்து போன அதிகாரிகள்

சென்னை: மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 38 வயது பெண் பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பெண் பயணி, சுற்றுலாப் பயணிகள் விசாவில் மலேசியா நாட்டிற்கு போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்திருந்தார். இதை அடுத்து அந்தப் பயணியின் உடமைகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அந்தப் பெண் பயணி இரண்டு பெரிய பிளாஸ்டிக் கூடைகள் எடுத்து வந்திருந்தார். அவர் கொண்டு வந்திருந்த கூடைகளை அதிகாரிகள் திறந்து பார்த்த போது பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இரண்டு கூடைகளுக்குள்ளும் சிறியதும் பெரியதுமாக, உயிருடன் இருந்த 23 பாம்புகள் நெளிந்து கொண்டு இருந்தன. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அலறி அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினார்கள்.

ஆனாலும் சில துணிச்சலான அதிகாரிகளும், சுங்கத்துறை சிப்பாய்களும் சேர்ந்து கொண்டு, அந்தப் பெண் பயணியிடம் விசாரணை நடத்தினர். அவர் மிகவும் அலட்சியமாக, இவைகள் எல்லா உயிரினங்களையும் போல, ஒரு உயிரினங்கள். இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டார். ஆனால் சுங்க அதிகாரிகள், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, இதைப் போன்ற உயிரினங்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு, சர்வதேச வன உயிரின பாதுகாப்பு பிரிவின் அனுமதி வாங்க வேண்டும்.

அது மட்டும் இன்றி இந்திய வன உயிரின பாதுகாப்பு பிரிவின் அனுமதியும் வாங்க வேண்டும். மேலும் இதைப் போன்ற விலங்குகளை இந்தியாவுக்குள் எடுத்து வருவதற்கான காரணங்களும் குறிப்பிட வேண்டும் என்று எடுத்துக் கூறி, அதற்கான ஆவணங்கள் எங்கே என்று கேட்டனர். ஆனால் அந்த பெண் பயணி, எந்தவித ஆவணமும் இல்லை என்று அலட்சியமாகப் பேசினார்.

இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அந்த பெண் பயணியை வெளியில் விடாமல் ஒரு அறையில் அடைத்தனர். 23 பாம்புகளையும் மீண்டும் கூடைகளில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள, மத்திய வனவிலங்கு உயிரினங்கள் குற்றப்பிரிவு அதிகாரிகளும் தகவல் கொடுத்தனர்.

இதை அடுத்து மத்திய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகள் வந்து, விசாரணை மேற்கொண்டனர். அதோடு அந்தப் பாம்புகளை ஆய்வு செய்தனர். இந்தப் பாம்புகள் அனைத்தும், ஆப்பிரிக்கா கண்டத்தில் அடர்ந்த காட்டுக்கு வசிக்கும் கொடிய விஷம் உடைய பாம்புகள் என்று தெரிய வந்தது. மேலும் இந்த பாம்புகளில் நோய்க்கிருமிகள் பெருமளவு பரவி இருக்கும்.

இவைகளை நம் நாட்டுக்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய்கள், நம் நாட்டில் பரவி விடும். மனிதர்களுக்கும், விலங்கின வகைகள் வகைகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும். எனவே இந்த பாம்புகள் அனைத்தையும், எந்த நாட்டில் இருந்து வந்ததோ அதே நாட்டுக்கு, எந்த ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்ததோ, அதே விமானத்தில் திருப்பி அனுப்ப வேண்டும்.

அதற்கான பணத்தை கடத்தி வந்த பெண் பயணியிடம் வசூலிக்க வேண்டும். அதோடு இந்தப் பெண் பயணியைக் கைது செய்து, இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பவர் யார் விசாரணை நடத்தி, அவர்களையும் கைது செய்ய அறிவுறுத்தினர். இதை அடுத்து சுங்க அதிகாரிகள், பெண் பயணியைக் கைது செய்தனர். பாம்புகளை இன்று காலை ஏர் ஏசியா விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர் செய்துள்ளனர். மலேசியாவில் இருந்து 23 பாம்புகளை பெண் பயணி எடுத்து வந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: இது வீடா.. இல்ல சரக்கு குடோனா?.. பெட்டி பெட்டியாக பீர் பாட்டில்கள் - அடித்து நொறுக்கிய பெண்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.