ETV Bharat / state

துலாமில் சஞ்சரிக்கும் சூரியனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?

author img

By

Published : Oct 17, 2021, 6:30 AM IST

நவக்கிரகங்களின் தலைவனான சூரியன் துலாம் ராசியில் சஞ்சாரம் செய்யக்கூடிய காலம் ஐப்பசி மாதமாகும். சூரியனின் நீச்சம் மற்றும் மற்ற கிரக அமைப்பின் படி, ஐப்பசி மாதத்தில் பல வழிகளில் நல்ல பலன்களும், அதிர்ஷ்டமும் பெறுவார்கள். அப்படி எந்தெந்த ராசிக்காரர்கள் ஐப்பசி மாதம் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகிறார்கள் என்பது குறித்து கீழே காண்போம்.

sun transit in libra
sun transit in libra

மேஷம்

இன்று துலாம் ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார். எனவே இன்னும் ஒரு மாத காலத்திற்கு, உங்கள் நிதி நிலைமை சராசரியாகவே இருக்கும். உங்கள் செலவுகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த மாதம் வெளியூர் பயணங்களையும் மேற்கொள்ளலாம்.

பரிகாரம் - அதிகாலையில் எழுந்து, சூரியக் கடவுளை வணங்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சார மாற்றம் சிறந்ததாக இருக்கும். அலுவலகம், வியாபாரம் மற்றும் உள்நாட்டுத் தொழில்களிலும் அதிக மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள்.

பரிகாரம் – தேவைப்படுவோருக்கு கோதுமையை தானமாக வழங்குங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சார மாற்றம் மிகவும் நல்லது. நிறுத்தப்பட்ட பணிகள் நிறைவேறும். ஒரு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், உங்கள் உடல்நலத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம் - சூரியனை தரிசித்து குங்குமம் கலந்த தண்ணீரை காணிக்கையாகச் செலுத்தி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு துலாம் ராசியில் சூரியன் அமர்வதால் கவலைகளையும், கஷ்டங்களையும் கொண்டு வரும். வேலை செய்பவர்கள் தங்கள் விருப்பத்திற்கு எதிராக இடமாற்றம் செய்யப்படலாம். இந்த மாதம் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

பரிகாரம் - தினமும் உங்கள் பெற்றோரின் கால்களைத் தொட்டு வணங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.

சிம்மம்

துலாம் ராசிக்குள் சூரியன் நுழைவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள் ஏற்படலாம். இந்த மாதம், நீங்கள் பல முக்கிய பயணங்களை மேற்கொள்ளலாம். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

பரிகாரம் - சூரிய நமஸ்காரம் செய்து, சூரியக் கடவுளின் மந்திரங்களைச் சொல்லுங்கள்.

கன்னி

துலாம் ராசிக்குள் சூரியன் நுழைவதால், கன்னி ராசிக்காரர்களுக்கு சராசரி மாதத்தை விட இந்த மாதம் சிறப்பாக இருக்கலாம். உங்கள் மரியாதை அதிகரிக்கப்போகிறது. உங்கள் உறவினர்களைச் சந்திக்க நீங்கள் ஒரு திட்டத்தை உருவாக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் நிறைவேறும்.

பரிகாரம் - காயத்ரி மந்திரத்தை (ஒரு ஜெபமாலை)108 முறை ஓதவும்.

துலாம்

இன்று முதல் ஒரு மாத காலம் சூரியன் உங்கள் ராசியில்தான் இருப்பார். எனவே, இந்த ஒரு மாத காலமும், நீங்கள் நிறைய நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். சிறு, சிறு விஷயங்களுக்கெல்லாம் நீங்கள் கோபப்படுவீர்கள். உங்களுக்கு ஈகோவும் ஏற்படலாம். ஆனால், உங்கள் போட்டியாளர்களால் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

பரிகாரம் - சிவலிங்கத்திற்கு ஜலாபிஷேகம் செய்யுங்கள்.

விருச்சிகம்

துலாம் ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவது விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லது. உங்களுக்குப் பல்வேறு செலவுகளும் ஏற்படலாம். வருமானத்திற்கும், செலவுகளுக்கும் இடையேயான சமநிலையை நீங்கள் சரியாக பராமரிப்பீர்கள். உங்கள் போட்டியாளர்களை நீங்கள் வெற்றி பெறுவீர்கள். எந்தவொரு தகராறுக்கும் சட்ட ரீதியாக முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

பரிகாரம் - அன்னை தேவியை வணங்கி வழிபடுங்கள்.

தனுசு

துலாம் ராசியில் சூரியன் அமர்வதால் தனுசு ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நல்ல மாதமாகும். உங்கள் வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையேயான சமநிலையை நீங்கள் சரியாக பராமரிப்பீர்கள். புதிதாக ஏதாவது ஒன்றை வாங்க நினைத்தால் இந்த மாதம் வாங்குவீர்கள். உங்களது ஆரோக்கியம் சராசரியாக இருக்கும்.

பரிகாரம் - தினமும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரத்தை ஓதுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு துலாமில் சூரியன் பெயர்ச்சியாவது கலவையான பலன்களைக் கொண்டு வரலாம். உங்கள் தொழிலில் ஆதாயங்கள் அடைவீர்கள். ஆனால், அதிக பேராசை கொண்டிருந்தால், நஷ்டத்தில்தான் முடிவடையும்.

பரிகாரம் – சூரிய அஷ்டகம் ஓதுங்கள்.

கும்பம்

துலாம் ராசியில் சூரியன் அமர்வதால், இந்த மாதம் உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த மாதமாக இருக்கும். சில சுப வேலைகளுக்காக நீங்கள் வெளியே செல்லலாம். சமூகத்தில் உங்கள் கெளரவம் அதிகரிக்கும்.

பரிகாரம் - காயத்ரி சாலிசா ஓதுங்கள்.

மீனம்

துலாம் ராசியில் சூரியன் அமர்வதால், மீன ராசிக்காரர்களுக்கு இது ஓரளவு கடினமான நேரமாக இருக்கலாம். சண்டைச் சச்சரவுகளில் இருந்து விலகி இருங்கள். உங்கள் உடல்நலத்தை நீங்கள் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பண லாபங்களைப் பெறலாம்.

பரிகாரம் - கோதுமையையும், வெல்லத்தையும் ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.