ETV Bharat / state

அதிமுகவை பிளவுபடுத்த நினைக்கும் துரோகியை வீழ்த்துவோம்.. ஓபிஎஸ் தரப்பு உறுதிமொழி..

author img

By

Published : Dec 24, 2022, 2:10 PM IST

அதிமுகவை பிளவுபடுத்த நினைக்கும் துரோகியை வீழ்த்துவோம் என்று ஓபிஎஸ் தரப்பினர் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

அதிமுகவை பிளவுபடுத்த நினைக்கும் துரோகியை வீழ்த்துவோம்.. ஓபிஎஸ் தரப்பினர் உறுதிமொழி
அதிமுகவை பிளவுபடுத்த நினைக்கும் துரோகியை வீழ்த்துவோம்.. ஓபிஎஸ் தரப்பினர் உறுதிமொழி

சென்னை: அதிமுகவின் நிறுவனத் தலைவரும், மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் இன்று (டிச.24) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள், “துரோகியின் ஆதிக்க வெறி, அராஜகத்தால், ஆணவத்தால், அகம்பாவத்தால், தான்தோன்றித்தனத்தால், தன்னலத்தால், திறமையின்மையால், தமிழ்நாட்டில் திமுக குடும்ப ஆட்சி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா வழியில் அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் மலர பாடுபடுவோம்.

திரைப்படத் தொழிலையும், கட்டுமானத் தொழிலையும் இனி யாருமே மேற்கொள்ள முடியாத அளவுக்கு அவற்றை கபளீகரம் செய்து, அதன் மூலம் தன்மக்கள் வருவாயை பெருக்கிக் கொண்டிருக்கும் திமுக குடும்ப ஆட்சியை துரத்திட வேண்டும். தியாகத்தையும் தொண்டு உணர்வையும் பின்னுக்குத் தள்ளி, கட்சியை பிளவுபடுத்த நினைக்கும் துரோகியை வீழ்த்திட உறுதி ஏற்போம்.

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவை அழிக்க நினைக்கும் சக்திகளை, தொண்டர்களின் உதவியோடு ஒழித்துக் காட்டுவோம். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட சட்ட திட்ட விதிகளை மீறி, கட்சியை அபகரிக்க நினைக்கும் சக்திகளை தடுத்திடுவோம்” என உறுதிமொழி ஏற்றனர்.

இதையும் படிங்க: ’திமுகவை வேரோடு வீழ்த்திக் காட்டுவோம்’ - ஈபிஎஸ் தரப்பு உறுதிமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.