ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி - பாதுகாப்பு பணியில் 20, 000 போலீசார்

author img

By

Published : Sep 9, 2021, 10:39 PM IST

Updated : Sep 9, 2021, 11:01 PM IST

சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில்
சென்னையில்

கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு சார்பில் அனைத்து மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், விநாயகர் சிலைகளை 3 அடிக்கு மிகாமல் வைத்து பொதுமக்கள் வீட்டில் வழிபட வேண்டும் எனவும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவோ, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது.

குறிப்பாக சென்னையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை சிலைகளை கரைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை தனி நபராக சென்று நீர் நிலைகளில் கரைக்கவும், அப்படி இயலாதவர்கள் அருகிலுள்ள ஆலயங்களில் சிலைகளை வைத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலைகளை கரைக்க ஏற்பாடு

அதேபோல ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்து நீர்நிலைகளில் கரைக்க அறநிலையத்துறை சார்பில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விழாக் காலங்களில் கடைத் தெருக்களுக்கு வரும் பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து நடக்க அரசு மற்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு

எச்சரிக்கை

மேலும், அரசு வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு

20,000 போலீசார் பாதுகாப்பு

இந்நிலையில் சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாநகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க :முட்டை ஓடு முதல் இசைக்கருவி வரை விநாயகர் உருவம்... அசத்தும் கள்ளக்குறிச்சி கலைஞர்!

Last Updated :Sep 9, 2021, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.