ETV Bharat / state

மனிதர்களை பாகுபடுத்தும் கருத்துகள் கொண்டது சனாதனம் - திருமாவளவன் எம்.பி. பேச்சு

author img

By

Published : Dec 12, 2022, 5:26 PM IST

சட்டமேதை அம்பேத்கரை கொச்சைப்படுத்த முயற்சித்தால், வி.சி.க.வின் பாதை, செயல்பாடுகள் வேறாக இருக்கும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்
திருமாவளவன்

மனிதர்களை பாகுபடுத்தும் கருத்துகள் கொண்டது சனாதனம் - திருமாவளவன்

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், காவி உடை மற்றும் திருநீறு, குங்குமப் பொட்டு வைத்து அம்பேத்கர் போஸ்டர் ஒட்டியதாக, சனாதன சங்பரிவார் அமைப்பைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "கொள்கை முரண்பாடு உள்ளவர்கள் அம்பேத்கருக்கு ஏன் மாலை போட வேண்டும், யார் நீ, உனக்கும் அம்பேத்கருக்கும் என்ன சம்மந்தம்'' என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் அம்பேத்கருக்கு காவி உடை, திருநீறு, குங்குமப் பொட்டு வைத்ததை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்றும்; அது வரலாற்று திரிபு இல்லையா என்றும் தெரிவித்தார்.

தேர்தல் வரும்; போகும்; பதவி இருக்கும் இல்லாமல் போகும், ஆனால் கடைசி வரை தாங்கள் அம்பேத்கர், பெரியார் பிள்ளைகளாக களமாடுவோம் என திருமாவளவன் தெரிவித்தார். இந்தியாவிலேயே தேர்தல் களத்தில் இருந்துகொண்டு மனு ஸ்மிருதியை அச்சிட்டு மக்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய துணிச்சல் கொண்ட ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் தான் எனக் கூறினார்.

பா.ஜ.க. சில வேலைகளை நேரடியாக செய்யாது, என்னையும் நேரடியாக விமர்சிக்க மாட்டார்கள், அரசியலுக்காக முகமூடி போட்டு கொண்டு சமத்துவம் பேசுவார்கள் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

மனிதர்களை பாகுபடுத்தக் கூடிய கருத்துகள் தான் சனாதனம் என்றும்; அந்த சனாதனத்தை எதிர்த்துப் போராடி வீழ்த்த முடியாது என்ற காரணத்தால் இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த மதத்தை அம்பேத்கர் ஏற்றதாக கூறினார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய திருவள்ளுவரை, எப்படி இந்துவாக அடையாளப்படுத்த முடியும் என்றும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என இந்து மதம் சொல்கிறதா என திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: தை அமாவாசை : மதுரை - காசி இடையே சிறப்பு ரயில் - ஒரு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.