ETV Bharat / state

"நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார்" - எதற்காக இப்படி சொல்கிறார் வேல்முருகன்!

author img

By

Published : Aug 8, 2023, 6:39 PM IST

என்எல்சியால் மொத்த டெல்டா மாவட்டங்கள் பாதிப்படையும், தற்போது கடலூர் மாவட்டம் பாதிப்பு அடைந்துள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

நான் எம்எல்ஏ பதவியை  ராஜினாமா செய்ய தயார்- தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்
நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார்- தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்

சென்னை: நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் அனல்மின் நிலைய மற்றும் சுரங்கச் செயல்பாடுகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சீர்கேடுகள் குறித்துப் பூவுலகின் நண்பர்கள் தயாரித்துள்ள ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ என்னும் ஆய்வு அறிக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (ஆகஸ்ட்8) வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வு அறிக்கையின் நெய்வேலி என்எல்சியை சுற்றியுள்ள 31 இடங்களில் 17 இடங்கள் மிகக் கடுமையாக மாசடைந்து இருப்பதும், 11 இடங்கள் குறிப்பிடத்தக்க அளவு மாசடைந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக என்எல்சி-ன் ஒன்பதாவது சுரங்கத்திற்கு அருகே உள்ள வடக்கு வெள்ளூர் கிராமத்தில் தொல்காப்பியர் நகரில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பாதரசத்தின் அளவு அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அவர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "அனல் மின் நிலையத்தில் இருந்து வெளி வரும், நிலக்கரி சாம்பல் உடல் நலனுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நுரையீரல் பிரச்னைக்கு வழிவகுக்கும். நிரந்தரப் பணி, வேலை வாய்ப்பு போன்ற வாக்குறுதிகள் காற்றோடு காற்றாக மாசாக கலந்திருக்கிறது. கடலூர் மாவட்டமே என்.எல்.சியால் பாதிக்கப்பட்டுள்ளது. உடல் நலம் சார்ந்த நோய்கள் ஏற்படுகிறது. மூச்சுத் திணறல் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஏற்படுகிறது.

இதையும் படிங்க: chennai metro rail: மாதவரத்தில் 1.4 கி.மீ., சுரங்கப்பாதை தோண்டும் பணியை முடித்தது நீலகிரி இயந்திரம்!

மேலும், என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கூட்டணி கட்சியில் இருக்கும் நான் எம்எல்ஏவாக ராஜினாமா செய்ய தயார். ஆனால் NLC நிறுவனம் மூடப்படுமா. நானும் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறேன். தமிழக அரசின் திட்டக்குழுவில் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் இருக்கிறார்.

ஆனால் மக்களின் பாதிப்புகளை தொடர்ந்து எடுத்து வைத்து வருகிறோம். மக்களை பற்றி கவலை கொள்ளாத நிறுவனமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. இதே நிலைமை நீடித்தால் ஒட்டு மொத்த டெல்டா பாதிப்படையும். மேலும், மற்ற மாநிலங்களில் புறக்கணிக்கும் திட்டங்கள், தமிழ்நாட்டில் செயல்படுத்தப் படுகிறது" எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னி அரசு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கில் மீண்டும் தீ விபத்து - வருவாய் அலுவலர், தாசில்தார் உள்ளிட்டோர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.