ETV Bharat / state

திமுக எம்பி மீதான கொலை வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு

author img

By

Published : Jan 8, 2023, 9:09 AM IST

திமுக எம்பி டி.ஆர்.வி. ரமேஷுக்கு எதிராக கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொலை வழக்கு விசாரணையை, வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

கடலூர் முந்திரி ஆலை கொலை வழக்கு
கடலூர் முந்திரி ஆலை கொலை வழக்கு

சென்னை: திமுகவை சேர்ந்த கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யபட்டார். இந்த கொலை வழக்கில் திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யபட்டனர். கொலை வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை, குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை, கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக் கோரி உயிரிழந்த கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தமிழகத்தின் ஆளும் கட்சியின் எம்பிக்கு எதிராக நடைபெற்று வரும் கொலை வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை. வழக்கு விசாரணை நடைபெறும் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது.

ஆனால், அவர் அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். அரசு அதிகாரிகள் தொடர்பில் உள்ளார். விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றத்திற்கு ரமேஷ் வரும் போது பெரும் எண்ணிக்கையிலான அவரின் ஆதரவாளர்கள் திரண்டு நீதிமன்ற வளாகத்தில் கூடுகின்றனர். வழக்கில் சாட்சிகளாக உள்ளவர்கள் தொழிலாளர்கள் மற்றும் கிராம வாசிகளாக உள்ளார்.

இதனால் அரசு தரப்பில், சாட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும். இது நீதிமன்ற பணியாளர் மற்றும் காவல்துறையினருக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தும். மேலும் காவல்துறை விசாரணையில் எம்பி ரமேஷ் தலையிட்டு, வழக்கை திசை திருப்ப முயல்வதால் அரசு வழக்கறிஞர் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே, வழக்கை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலையின் பேச்சு சரியில்லை: பிளாக் ஷீப் விக்னேஷ்காந்த் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.