ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 1,964 பேருக்கு கரோனா

author img

By

Published : Aug 11, 2021, 8:52 PM IST

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,964 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் மேலும் 1,964 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் மேலும் 1,964 பேருக்கு கரோனா

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஆகஸ்ட் 11) கரோனா குறித்த புள்ளி விவர தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 152 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,964 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 3 கோடியே 82 லட்சத்து 85 ஆயிரத்து 106 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 லட்சத்து 81 ஆயிரத்து 94 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை, மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 20 ஆயிரத்து 382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனாவிலிருந்து மீண்டு இன்று 1,917 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 26 ஆயிரத்து 317 ஆக உயர்ந்துள்ளது. தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 28 நோயாளிகள் இன்று உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த நோய் பரவல் விழுக்காடு 1.3 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,40,300

கோயம்புத்தூர் - 31,863

செங்கல்பட்டு - 1,63274

திருவள்ளூர் - 11,4461

சேலம் - 94,328

திருப்பூர் - 88,754

ஈரோடு - 95,559

மதுரை- 73,729

காஞ்சிபுரம் - 72,144

திருச்சிராப்பள்ளி - 73,209

தஞ்சாவூர் -68,972

கன்னியாகுமரி - 60,451

கடலூர் - 61,220

தூத்துக்குடி - 55,274

திருநெல்வேலி - 48,151

திருவண்ணாமலை -52,586

வேலூர் - 48,356

விருதுநகர் - 45,628

தேனி - 43,038

விழுப்புரம் - 44,205

நாமக்கல் - 47,771

ராணிப்பேட்டை - 42,169

கிருஷ்ணகிரி - 41,638

திருவாரூர் -38,327

திண்டுக்கல் - 32,322

புதுக்கோட்டை - 28,533

திருப்பத்தூர் - 28,410

தென்காசி - 26,928

நீலகிரி - 31,048

கள்ளக்குறிச்சி - 29,521

தருமபுரி - 26,415

கரூர் - 22,836

மயிலாடுதுறை - 21,325

ராமநாதபுரம் - 20,110

நாகப்பட்டினம் - 19,075

சிவகங்கை - 19,022

அரியலூர் - 16,037

பெரம்பலூர் - 11,579

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்-1018

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்- 1080

ரயில் மூலம் வந்தவர்கள்- 428

இதையும் படிங்க: தடுப்பூசி போடனும், இல்லன கரோனா டெஸ்ட் எடுக்கனும் - கேரள மதுப்பிரியர்களுக்கு கெடுபிடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.