ETV Bharat / state

ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு இணையதளம் மூலம் தீர்வுகாண புதிய திட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 11:01 PM IST

Updated : Oct 18, 2023, 6:28 AM IST

Tamil nadu school Teachers: பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் கோரிக்கைகளை தீர்ப்பதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து தீர்வு காண புதிய நடைமுறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அறிவிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் கோரிக்கைகளை தீர்ப்பதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யப்பட்ட தீர்மானம், புதிய நடைமுறையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கான இணையதளம் முழுமையாக தயாரானவுடன் இதனை பள்ளிக்கல்வித்துறை முறைப்படி அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறையில் நடைபெறும் தொடர் போராட்டங்களுக்கும், மலைபோல் குவிந்திருக்கும் வழக்குகளுக்கும் அடிப்படை காரணம் மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காணாதது தான் என்பதை கண்டுபிடித்த பள்ளிக்கல்வித்துறையின் புதிய முதன்மை செயலாளர் குமரகுருபரன், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு இணையதளம் வழியாகவே குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த திட்டம் மிக விரைவில் அமலுக்கு வர உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் மதுரை கிளை நீதிமன்றங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்து ஐந்தாயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, குறிப்பாக பதவி உயர்வு, சம்பள உயர்வு , பதவி உயர்வில் பணிமூப்பு கடைபிடிக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்கள் தான் வழக்குகளை தொடுக்கின்றனர். முதலில் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்கட்ட நிலையில் உள்ள அலுவலர்கள், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடுவதன் காரணமாகவே ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் நீதிமன்றங்களுக்கு செல்கின்றனர்.

ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு குறை தீர்ப்பு முகாம் என கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. தற்போது அந்த முகாமகள் முற்றிலுமாக செயல்படாமல் உள்ளது. அப்படியே அந்த முகாம்களை நடத்தினாலும், அதில் முழுவதுமாக தீர்வு காணப்படுவதில்லை. பள்ளிக்கல்வித்துறையின் புதிய முதன்மை செயலாளராக தற்போது பதவியேற்றுள்ள குமரகுருபரன், பள்ளிக்கல்வி துறையின் தொடர் பிரச்சனைகளுக்கான காரணங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அந்த ஆய்வுகளின்படி, பள்ளிக்கல்வித்துறையில் நீடித்து வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய வழிமுறைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளார். அதில் "இனி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களோ அவர்களுடைய கோரிக்கைகளை இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். அந்த கோரிக்கைகளுக்கு யார் தீர்வு காண வேண்டுமோ, அந்த அலுவலர், குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆசிரியர்களின் கோரிக்கை குறித்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும்.

முதல்கட்ட நிலையில் உள்ள அலுவலரால் தீர்வு காண முடியாது நிலை ஏற்பட்டால், அடுத்த கட்ட நிலையில் உள்ள அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட மனுவை அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட அலுவலர்கள் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை ஏற்கப்படுகிறதா, நிராகரிக்கப்படுகிறதா என்பதை உடனுக்குடன் மனுதாரர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே அறிவிக்க வேண்டும்" என முதன்மை செயலாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுமட்டுமின்றி, இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படுவதனால், நீதிமன்றங்களில் புதிய வழக்குகள் பதிவாவது தடுக்கப்படுவதுடன், ஆசிரியர்களின் கோரிக்கை சார்ந்த போராட்டங்களும் கணிசமாக குறைவதற்கான வாய்ப்பும் உருவாகம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: லியோ படம் பார்ப்பேன்.. ஆனால் ஒரு விஷயம் இருக்கனு.. வானதி சீனிவாசன் ஒபன் டாக்!

Last Updated : Oct 18, 2023, 6:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.