ETV Bharat / state

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

author img

By

Published : Nov 7, 2022, 3:01 PM IST

Updated : Nov 7, 2022, 4:46 PM IST

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு களுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ்
பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாட்டில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அந்த அட்டவணையின்படி, 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 2023ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது.

இப்பொதுத்தேர்வுகளில் 27.30 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வுகள் 13.03.2023 அன்று தொடங்கி 03.04.2023 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 7,600 பள்ளிகளில் பயிலும் 880 லட்சம் பள்ளி மாணவர்கள் 3,169 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர். மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத் தேர்வுகள் 14.03.2023 அன்று தொடங்கி 05.04.2023 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 7,600 பள்ளிகளில் பயிலும் 8.50 லட்சம் பள்ளி மாணவர்கள் 3,169 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.04.2023 அன்று தொடங்கி 20.04.2023 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 12,800 பள்ளிகளில் பயிலும் 10 லட்சம் பள்ளி மாணவர்கள் 3.986 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர்.

இதையும் படிங்க: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்; உச்ச நீதிமன்றம்

Last Updated : Nov 7, 2022, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.