ETV Bharat / state

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நாளை கட்டாயம் விடுப்பு எடுக்கக் கூடாது - மேலாண்மை இயக்குநர் ஆணை!

author img

By

Published : Dec 22, 2019, 7:47 PM IST

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நாளை கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என அத்துறையின் மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை பணி
போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை பணி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாளை (23.12.19) அன்று போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்களுக்கு, கழக மேலாண் இயக்குநர் உத்தரவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், ' நம்முடைய மாநகரப் போக்குவரத்துக் கழகம் என்பது ஒரு அத்தியாவசியமானது. இது, மக்கள் சேவையாற்றும் நிறுவனம் என்பதும் பொதுமக்கள் சேவைக்காக செயல்படும் நிறுவனம் என்பதும் நம் ஊழியர்கள் அனைவரும் அறிந்ததே. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் வருகின்ற 23ஆம் தேதி தவறாமல் பணிக்கு வர வேண்டும்.

மேலும், 23ஆம் தேதி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினத்தில் வழங்கப்பட்டுள்ள சி ஆப், பணி ஓய்வு ஆகியவற்றில் உள்ளவர்களும் கட்டாயமாக பணிக்கு வர வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குமரியில் இயங்கும் மினி பேருந்துகளில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சோதனை

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 22.12.19

சென்னை போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும்; மேலாண்மை இயக்குனர் உத்தரவு..

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுமையாக போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வருகின்ற 23.12.19 அன்று போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரால் வெளியிடப்பட்ட உத்தரவில்,
நம்முடைய மாநகர் போக்குவரத்து கழகம் ஒரு அத்தியாவசியமான மக்கள் சேவையாற்றும் நிறுவனம் என்பதும், பொதுமக்கள் சேவைக்காக செயல்படும் நிறுவனம் என்பதும் நம் ஊழியர்கள் அனைவரும் அறிந்ததே.. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் வருகின்ற 23 ம் தேதி தவறாமல் பணிக்கு வர வேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், 23ம் தேதி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் ரத்து செய்யப்படுகிறது என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. அன்றைய தினத்தில் வழங்கப்பட்டுள்ள சி ஆப் மற்றும் பணி ஓய்வு ஆகியவற்றில் உள்ளவர்களும் கட்டாயமாக பணியில் ஆஜராக வேண்டும் என இதன்மூலம் உத்தரவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது..

tn_che_02_mtc_sent_notices_to_all_driver_conductors_script_7204894Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.