ETV Bharat / state

"எங்க வேலை ரொம்ப ஈஸி" - பொன்முடி வீட்டில் ED ரெய்டு குறித்த முதல்வர் கூலாக பேட்டி!

author img

By

Published : Jul 17, 2023, 12:07 PM IST

Updated : Jul 17, 2023, 12:36 PM IST

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனையை சட்டப்படி சந்திப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

பொன்முடிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனையை சட்டப்படி சந்திப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொன்முடிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனையை சட்டப்படி சந்திப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: பெங்களூருவில் இன்று (ஜூலை 17ஆம் தேதி) துவங்கும், எதிர்கட்சிகளின் இரண்டாவது ஒற்றுமை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பெங்களூரு புறப்படும் முன், முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து பிகார் மாநிலம் பாட்னாவில் கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவுகள் எடுத்துள்ளனர்.

அதேபோல் இன்றும் (ஜூலை 17) நாளையும் (ஜூலை 18) பெங்களூருவில் எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது அந்த கூட்டத்தில் 24 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பிகார் மாநிலத்தை தொடர்ந்து கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்துவதற்கு தொடர்ந்து கூட்டம் கூட்டப்படுவது பாஜகவின் ஆட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை. இது போன்ற நடவடிக்கைகளை, ஏற்கனவே வட மாநில பகுதிகளில் பாஜக செய்து கொண்டிருந்தது தற்போது தமிழ்நாட்டில் அந்த பணியை தொடங்கியுள்ளது.

அதைப்பற்றி சிந்தித்து திராவிட முன்னேற்றக் கழகம் கவலைப்படவில்லை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. இது கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதாவின் போடப்பட்ட பொய் வழக்கு. அதன் பின்பு தொடர்ந்து பத்து ஆண்டுகளும் அதிமுக தான் ஆட்சியில் இருந்தது அப்போது எல்லாம் இது போன்ற சோதனைகளை அவர்கள் நடத்தவில்லை.

அண்மையில் பொன்முடி மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு இருந்தார். தற்போது நடந்து வரும் சோதனையின் வழக்கும் அவர் சட்டப்படி சந்திப்பார். வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில், இதற்கெல்லாம் மக்கள் நிச்சயம் பதில் வழங்குவார்கள் அதற்கு தயாராக இருக்கின்றார்கள் இதுதான் உண்மை.

பீகார் கர்நாடகா இன்னும் பல மாநிலங்களில் நடக்க உள்ள இந்த கூட்டத்தை, திசை திருப்ப பாஜக செய்யக்கூடிய தந்திரம் தான் இது. இதையெல்லாம் சமாளிப்பதற்கு எதிர்கட்சிகள் தயாராக உள்ளோம். ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆளுநர் தேர்தல் பிரச்சாரத்தை எங்களுக்காக நடத்திக் கொண்டிருக்கிறார், இப்போது அமலாக்கதுறையும் உடன் சேர்ந்து இருக்கிறது எனவே தேர்தல் பிரச்சாரம் எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்று தான் கருதுகிறேன்.

இதெல்லாம் சர்வ சாதாரணம், திசை திருப்பக் கூடிய நாடகம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் இது எல்லாம் எதற்கு செய்கிறார்கள் என்று மக்களுக்கு மனசாட்சிப்படி தெரியும். காவேரி மேகதாது பிரச்சினையைப் பொறுத்தவரை கலைஞர் என்ன முடிவெடுத்து அதை நிறைவேற்றிக் கொண்டிருந்தாரோ அந்த பணியில் இருந்து தாங்கள் சிறிதும் நழுவாமல் அதை கடைபிடிப்போம்.

தற்போது நடைபெற உள்ள கூட்டம் ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜகவை அகற்றுவதற்கான கூட்டம் தற்போது இந்தியாவுக்கே ஆபத்து வந்து உள்ளது. அந்த ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காக இந்த கூட்டம் எதிர்கட்சிகளால் நடைபெற்று வருகிறது.வேறு எதுவும் இல்லை இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

Last Updated :Jul 17, 2023, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.