ETV Bharat / state

கோயம்பேடு இறைச்சி கடை ஆடுகள் திருட்டு, போலீஸ் விசாரணை

author img

By

Published : Oct 27, 2020, 11:35 AM IST

சென்னை: கோயம்பேட்டில் இறைச்சி கடையில் இருந்த ஆடுகளை திருடர்கள் காரில் ஏற்றிச் சென்ற சிசிடிவி காட்சியை வைத்து திருடர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

goats stolen from meat shop Koyambedu
goats stolen from meat shop Koyambedu

சென்னை கோயம்பேட்டில் யுவராஜ் என்பவர் ஆடு, கோழி இறைச்சி கடை நடத்திவருகிறார். இவr தனது கடையில் இருந்த 43 ஆடுகளை குடோனில் வழக்கம்போல் அடைத்து வைத்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பூட்டை கள்ள சாவி போட்டு திறந்து, குடோனில் இருந்த 26 ஆடுகளை திருடி காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். ஆடுகளை திருடிச் செல்லும் காட்சி அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து ஆடுகளை திருடிச் சென்ற நபர்களை கோயம்பேடு காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க... விலையுயர்ந்த சைக்கிள்களை திருடிய பள்ளி மாணவன் - எச்சரித்த காவல்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.