ETV Bharat / state

‘திருநங்கைகள் அகதிகளாக வாழும் நிலை நிச்சயமாக மாற்றப்படும்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

author img

By

Published : Oct 13, 2022, 8:35 PM IST

திருநங்கைகள் தனது சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் நிலை நிச்சயமாக மாற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருநங்கைகள் அகதிகளாக வாழும் நிலை நிச்சயமாக மாற்றப்படும்
திருநங்கைகள் அகதிகளாக வாழும் நிலை நிச்சயமாக மாற்றப்படும்

சென்னை: திருநங்கைகள் முப்பெரும் விழாவின் கல்வி மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த அமர்வு சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. திருநங்கைகளின் வரவேற்பு நடனத்துடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திண்டுக்கல் லியோனி முன்னிலையில், யுனஸ்கோ நிறுவனத்தின் மூலம், சகோதரன் அமைப்பினரால் நடத்தப்பட்ட, பள்ளி சூழலில் திருநங்கைளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த ஆய்வு விபரங்கள் ஒலி ஒளி வடிவில் சமர்ப்பிக்கப்பட்டது.

60 சதவீதம் மாறியப்பாலின மாணவர்கள் கேலிக்கும், 40 சதவீதம் மாணவர்கள் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளில் வன்கொடுமைகளை சந்தித்துள்ளனர். இது எங்குமே அறிவிக்கப்படவில்லை. 52 சதவீதம் முதல் 56 சதவீதம் மாணவர்கள் பள்ளி இடைவிலகலுக்கு உள்ளாகின்றனர்.

எனவே கல்வி பாடத்திட்டங்களில் மாறுபட்ட பாலின அடையாளங்கள் குறித்து கற்பிக்கப்பட வேண்டும். வன்கொடுமைக்கு எதிரான கொள்கைகள் கல்வி சூழலில் உருவாக்கப்பட வேண்டும். மாணவர்கள் வன்கொடுமைகளை குறித்து புகார் தெரிவிக்கும் வசதிகள் ஏற்படுத்தவேண்டும். ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஒட்டுமொத்த வன்கொடுமை ஒழிப்பு குறித்த செயல்பாடுகளில் பெற்றோரும் ஈடுபடுத்தப்பட வேண்டும் என யுனஸ்கோ அமைப்பின் சரிதா ஜாதவ் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைவரையும் மனிதம் சார்ந்த அணுகுமுறையில் ஆதரவளிக்க வேண்டும். தன்னுடைய தாயாருக்கு சுகாதாரப் பராமரிப்பையும் ஒரு திருநங்கை பராமரிப்பாளர் மிக அன்பாக கவனித்து கொள்கிறார்.

திருநங்கைகள் அகதிகளாக வாழும் நிலை நிச்சயமாக மாற்றப்படும்

திருநங்கைகளுக்கான அனைத்து முன்னெடுப்புக்களையும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எற்படுத்தினார் . திருநங்கைகள் தனது சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் நிலை நிச்சயமாக மாற்றப்படும். யுனஸ்கோ ஆய்வின் அனைத்து கருத்துக்களும் வரும் அரசு அலுவல் கூட்டங்களில் ஆழமாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதுகலை ஆசிரியர் பணிக்கு நாளை நேரடி கலந்தாய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.