ETV Bharat / state

தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்! எதுக்கு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 9:05 AM IST

Madras High Court Fined Tamil Nadu Government: கடந்த 2007ஆம் ஆண்டு பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தியதாகவும், 8 ஆண்டுகளாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுட்டிக் காட்டியும் தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras high court
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கடந்த 2007ஆம் ஆண்டு பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சுகாதார துறையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு முன் தேதியிட்டு பணி நிரந்தரம் வழங்கி, பணிமூப்பு பட்டியலை திருத்தி அமைத்து பதவி உயர்வு வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2007ஆம் ஆண்டு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த போதும், அதை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை செயலாளர், மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தபடும் என்றும் அது சம்மந்தமான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து 2015ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, எட்டு ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், 2007ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பதவி உயர்வு உத்தரவை அமல்படுத்தி, அறிக்கை தாக்கல் செய்ய இரண்டு வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: வெளிநாட்டில் உள்ள இந்திய தொல்பொருட்களை மீட்கக் கோரிய வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் சூப்பர் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.