ETV Bharat / state

பக்ரைன் விமானத்தில் பயணித்த தஞ்சாவூர் பயணி நடுவானில் உயிரிழப்பு

author img

By

Published : Jan 1, 2023, 2:21 PM IST

பக்ரைனிலிருந்து சென்னை வந்த விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது தஞ்சாவூரைச் சேர்ந்த பயணி திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் உயிர் இழந்தார்.

Etv Bharatபக்ரைன் விமானத்தில் பயணித்த தஞ்சாவூர் பயணி - நடுவானில் நெஞ்சு வலியால் உயிரிழப்பு
Etv Bharatபக்ரைன் விமானத்தில் பயணித்த தஞ்சாவூர் பயணி - நடுவானில் நெஞ்சு வலியால் உயிரிழப்பு

சென்னை: பக்ரைனிலிருந்து சென்னை நோக்கி வந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது அதில் பயணித்த தஞ்சாவூரைச் சேர்ந்த பயணி திடீர் மாரடைப்பால் உயிர் இழந்தார். அவரது உடலை கைப்பற்றிய சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது (66). இவர் புனித பயணமாக மெக்காவிற்கு சென்று விட்டு, குழுவினருடன் சேர்ந்து, இன்று(ஜன.1) அதிகாலை ஃகல்ப் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில், பக்ரைனில் இருந்து சென்னை திரும்பி கொண்டு இருந்தார்.

இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ராஜா முகமதுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மூச்சு விட முடியால் திணறினார். அவரைக் கண்ட சக குழுவினர், விமான பணிப் பெண்களிடம் தெரிவித்தனர். உடனடியாக விமான பணிப் பெண்கள், ராஜா முகமதுவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, விமானிக்கும் தகவல் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்த விமானி, பயணி ஒருவர் நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். ஆகவே, மருத்துவ குழுவை விமான நிலையத்தில் தயாராக இருக்கும்படி கூறினார்.

அதோடு இந்த விமானத்திற்கு தரையிறங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அதன்படி கல்ப் ஏர்வேஸ் விமானம் இன்று (ஜன.1) அதிகாலை 3:15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், விமானத்திற்குள் ஏறி, பயணி ராஜாமுகமதுவை பரிசோதனை செய்தனர். ஆனால், அவர் இருக்கையில் உயிர் இழந்திருந்தார்.

இதை அடுத்து மருத்துவர்கள் கடுமையான மாரடைப்பு காரணமாக, ராஜா முகமது உயிரிழந்தார் என்று அறிவித்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்துகின்றனர். இதனிடையே, இந்த ஃகல்ப் ஏர்வேஸ் பயணிகள் விமானம், மீண்டும் இன்று (ஜன.1) அதிகாலை 4:10 மணிக்கு, சென்னையில் இருந்து பக்ரைன் புறப்பட்டுச் செல்ல வேண்டும். இந்த விமானத்தில் பக்ரைன் செல்ல 192 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் விமானி, பயணி ஒருவர் விமானத்திற்குள் உயிரிழந்து விட்டதால், விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின்புதான், மீண்டும் இயக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து விமான நிறுவன ஊழியர்கள், அந்த விமானத்தை கிருமி நாசினிகள் தெளித்து முழுமையாக சுத்தப்படுத்தினர். அதன் பின்பு ஃகல்ப் ஏர்வேஸ் விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக பக்ரைனுக்கு புறப்பட்டுச் சென்றது.

இதையும் படிங்க:மூதாட்டியிடம் நகைகளை திருடிச் சென்ற பணிப்பெண் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.