ETV Bharat / state

ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு நடத்தக் கோரி ஆசிரியர்கள் கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 9:45 PM IST

Updated : Sep 15, 2023, 12:20 PM IST

Teachers request: ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வை நடத்தக் கோரி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

school education
டிபிஐ வளாகம்

ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு நடத்தக் கோரி ஆசிரியர்கள் கோரிக்கை

சென்னை: ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு பணி நியமனத்திற்கான தேர்வினை நடத்த வேண்டும் எனவும், போட்டித் தேர்வு இல்லாமல் பணி நியமனம் செய்யக்கூடாது எனவும் பணி நியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து, ஆசிரியர் பணி நியமனத் தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மனு வழங்கினர்.

இது குறித்து பணி நியமனத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் கூறியதாவது, “ஆசிரியர் நியமனத் தேர்விற்கான ஆண்டு அறிக்கை வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தேர்வை நடத்தாமல் இருப்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்து, அரசு வேலைக்காக காத்திருக்கும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் பணி நியமன தேர்வினை நடத்தாமல் நேரடி பணி நியமனம் செய்ய கூடாது.

குறிப்பிட்ட சில பேருக்கு நேரடி பணி நியமனம் செய்யும் போது மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படும். அரசாணை எண் 149ஐ நடைமுறைப்படுத்தினால் மட்டுமே எங்களுக்கு வேலை கிடைக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற நாங்கள் தொடர்ந்து வேறு வேலைக்குச் செல்லாமல் பணி நியமனத் தேர்விற்கு படித்துக் கொண்டு வருகிறோம்.

சிலர் கூறுவதால் நியமனத் தேர்வினை ரத்து செய்யாமல், மாணவர்களின் நலனையும், போட்டித் தேர்விற்காக படித்துக் கொண்டு இருக்கும் எங்களின் நிலையையும் கருத்தில் கொண்டு நியமனத் தேர்வினை நடத்திட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:"பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விலக முடியாது" - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திட்டவட்டம்!

Last Updated :Sep 15, 2023, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.