ETV Bharat / state

TNTET Paper 2 : ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாள் இன்று தொடக்கம்

author img

By

Published : Feb 3, 2023, 8:36 AM IST

Updated : Feb 3, 2023, 3:53 PM IST

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள்(TNTET Paper 2) கம்ப்யூட்டர் வழித் தேர்வு (பிப்ரவரி 3ஆம் தேதி) இன்று முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள் இன்று முதல் ஆன்லைனில் தொடக்கம்
ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள் இன்று முதல் ஆன்லைனில் தொடக்கம்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையும் இரண்டாவது கட்டத்தில் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 188 இடங்களில் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வுக்கு 4 லட்சத்து 1 ஆயிரத்து 886 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 4 லட்சத்து 1ஆயிரத்து856 பேர் தகுதி பெற்றுள்ளனர். 5313 மாற்றுத்திறனாளிகளும், கண் விழி பார்வை குறைவுடையோர் 1218 பேரும், 2662 சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுதுவோரும் விண்ணப்பித்துள்ளனர்.

கம்ப்யூட்டர் விழி தேர்வு எழுத வருவதற்கான மையங்கள் அதிகளவாக சேலத்தில் 14, திருச்சிராப்பள்ளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தலா 13 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் தேர்வு எழுதுவதற்கு இரண்டு லட்சத்து 21 ஆயிரத்து 240 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் தேர்வு எழுத 1 லட்சத்து 80 ஆயிரத்து 616 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் தலா ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறுவதை கண்காணிக்க தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வின் போது நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து சிசிடிவி மூலம் இணை இயக்குனர்கள் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் வெளியிட்டுள்ளது. தேர்வுகளுக்கு காலையில் நடைபெறும் தேர்வினை எழுத 7.30 மணிக்குள்ளும், மதியம் நடைபெறும் தேர்வினை எழுத 12.30 மணிக்குள் உள்ளே அனுமதிக்கப்படுவர்.

தேர்வு மையங்களுக்குள் மொபைல், வாட்ச், பெண்கள் காதுகளில் நகைகள் உள்ளிட்டவற்றை அணிந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படும். மேலும் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வினை எழுதுவதற்கும் தடை விதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ஆம் ஆண்டிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை 2022 மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 26ஆம் தேதி வரையில் பெறப்பட்டது. தற்போது பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள் 2க்கு உரிய தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்தப்பட உள்ளது.

கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலியுங்கள்!

Last Updated :Feb 3, 2023, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.