ETV Bharat / state

பட்டியலினத்தவருக்கான 60% வீடுகள் இலக்கை அடையமுடியவில்லை - தணிக்கைத் துறை

author img

By

Published : Apr 21, 2023, 7:38 PM IST

பட்டியலினத்தவருக்கான 60 விழுக்காடு வீடுகள் என்ற இலக்கை அடையமுடியவில்லை என இந்திய தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

Target of 60 percent housing for SC and ST not met says Indian audit and accounts departments
Target of 60 percent housing for SC and ST not met says Indian audit and accounts departments

சென்னை: திட்டமிடலில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் கவனக் குறைவினால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) குடும்பங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட 60 விழுக்காடு வீடுகள் என்ற இலக்கை அடைய முடியவில்லை என இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தெரிவித்துள்ளது.

திட்டமிடலில் குறைபாடுகள் விளைவாக இறுதி நிரந்தர காத்திருப்பு பட்டியலில் போதுமான ஆதிதிராவிடர்/பழங்குடியினர் குடும்பங்கள் சேர்க்கப்படாமல் போனது. மேலும் கணிசமான எண்ணிக்கையிலான ஆதி திராவிடர்/ பழங்குடியினர் குடும்பங்கள் சரியான காரணமின்றி சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (Socio Economic and Caste Census) தரவுகளிலிருந்து அகற்றப்பட்டது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் (PMAY-G) வழிகாட்டுநெறிமுறைகளின்படி, ''அனுமதிக்கப்பட்ட வீடுகளில் 60 விழுக்காடு இலக்கு எஸ்.சி/எஸ்.டி பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். நிரந்தர காத்திருப்பு பட்டியலில் (PWL) உள்ள அனைத்து எஸ்.சி/எஸ்.டி குடும்பங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்ட பின் நிரந்தர காத்திருப்பு பட்டியலில் உள்ள அனைத்து எஸ்.சி/எஸ்.டி குடும்பங்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது நிரந்தர காத்திருப்பு பட்டியலில் எஸ்.சி/எஸ்.டி குடும்பங்கள் இல்லை. தலைமைச்செயலர் மட்டத்தில் சான்றிதழை அரசு சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு, PWLல் எஸ்.சி/எஸ்.டி க்கான இருப்பு இலக்கு மற்ற பிரிவினருக்கு ஒதுக்கப்படலாம்.

மார்ச் 2021 நிலவரப்படி, எஸ்.சி/எஸ்.டி பயனாளிகளுக்கு 3.05 இலட்சம் வீடுகள் (5.09 இலட்சம் அனுமதிக்கப்பட்ட பயனாளிகளில் 60 விழுக்காடு) ஒதுக்கும் இலக்குக்கு எதிராக, 2.31 இலட்சம் மட்டுமே எட்ட முடிந்தது. 3.05 இலட்சம் எஸ்.சி/எஸ்.டி குடும்பங்களை உள்ளடக்கும் இலக்குக்கு எதிராக, நிரந்தர காத்திருப்பு பட்டியல் நிலையில் அடையாளம் காணப்பட்ட உண்மையான எண்ணிக்கை 2.62 இலட்சம் மட்டுமே என்று தணிக்கை கண்டறிந்தது. எனவே, இத்திட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியவில்லை’’ என இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது.

தணிக்கை ஆய்வில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்: அவையாவன:-

* 'தானியங்கு சேர்க்கை’ அளவுகோல்களின் கீழ் மொத்தம் 24,779 எஸ்.சி/எஸ்.டி பயனாளிகள் மற்றும் 1 முதல் 5 இடர்பாடு மதிப்பெண்கள் உள்ளவர்கள் சரியான காரணமின்றி நிராகரிக்கப்பட்டனர்.

* மொத்தம் 70,171 குடும்பங்கள் 'பரிந்துரைக்கப்பட்டவர் இல்லாமல் மரணம்' என்று காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டன. பயனாளிகளின் தரவைச் சரிபார்த்ததில், சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு தரவைச் சரிபார்த்ததில், இந்தக் குடும்பங்களில் 63,221 குடும்பங்களில் மனைவி அல்லது மகன்/மகள் இருவரும் இருப்பது கண்டறியப்பட்டது, அவர்களில் 24,935 பேர் எஸ்.சி/எஸ்.டி பயனாளிகள்.

* தகுதியற்ற குடும்பங்களுக்கான அனுமதியின் பகுப்பாய்வில், 326 எஸ்.சி/எஸ்.டி பயனாளிகளின் வீடுகளுக்கான ஒப்பளிப்பு எஸ்.சி/எஸ்.டி அல்லாத குடும்பங்களுக்கு, பணம் செலுத்தப்பட்டதை தணிக்கை கண்டறிந்தது.

தகுதியான பல எஸ்.சி/எஸ்.டி குடும்பங்கள் வீட்டு மனைகள் கொண்டிருக்கவில்லை. இது எஸ்.சி/எஸ்.டி கும்பங்களைப் பொறுத்தமட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய இயலவில்லை என்று தமிழ்நாடு அரசு பதிலளித்தது. வருவாய்த் துறையுடன் போதுமான ஒருங்கிணைப்பு இல்லாததால் இலவச வீட்டு மனைகள் வழங்குவதில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தணிக்கை கண்டறிந்துள்ளது.

இதையும் படிங்க: பேண்டேட் கட்டுக்குள் மறைத்து வைத்து 1.12 கிலோ தங்கம் கடத்தல் - பயணி ஒருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.