ETV Bharat / state

கோயில்களில் இலவச திருமணத்திற்கு ரூ.50 ஆயிரம் - தமிழ்நாடு அரசு

author img

By

Published : Feb 22, 2023, 5:42 PM IST

கோவில்களில் நடத்தப்படும் இலவச திருமண திட்டத்திற்கு வழங்கப்பட்டு வந்த 2 கிராம் தங்கம் 4 கிராமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான திட்ட செலவினத்தொகை 20 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பில் 283 ஏழை எளிய தம்பதிகளுக்குக் கோயில் மூலம் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் இந்த இலவச திருமணங்களை நடத்துவதற்காகத் திட்டச் செலவினத் தொகையான 20 ஆயிரத்தை 50 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருமாங்கல்யம் 4 கிராம் - ரூ. 20,000, மணமகன் ஆடை ரூ. 1000, மணமகள் ஆடை - ரூ. 2000 மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு - ரூ. 2000, மாலை - புஷ்பம் - ரூ. 1000, பீரோ - ரூ. 7800, கட்டில் ரூ. 7500, மெத்தை - ரூ. 2200, தலையணை 2 - ரூ. 190, பாய் - ரூ. 180, கை கடிகாரம் - ரூ. 1000, மிக்ஸி - ரூ. 1490, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் - ரூ. 3640 என மொத்தமாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கான பொருட்கள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்.

கோவில்களில் இலவச திருமணம் நடத்தி வைப்பதற்கு உபயதாரர்கள் கிடைக்காத நிலையில், கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. எனவே, இந்த இலவச திருமண திட்டத்திற்கான செலவின தொகையை ரூ.20,000 இருந்து ரூ. 50,000 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் நில அதிர்வா? குலுங்கிய கட்டடங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.