ETV Bharat / state

10 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் - டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு

author img

By

Published : May 13, 2020, 10:44 AM IST

சென்னை: தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் (டிஜிபி) திரிபாதி 10 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி) இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

நெல்லை மாவட்ட நிலமோசடி தடுப்புப் பிரிவு டிஎஸ்பி முகேஷ் ஜெயகுமார், கரூர் சப்டிவிஷனுக்கும், கரூரில் இருந்த டிஎஸ்பி சுகுமார் கரூர் குற்ற ஆவணக் காப்பகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி அருள்மொழி அரசு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூருக்கும், புதுக்கோட்டை மாவட்ட நிலமோசடி தடுப்புப்பிரிவு டிஎஸ்பி தினேஷ்குமார், திருவாரூர் சப் டிவிஷனுக்கும், தஞ்சாவூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு டிஎஸ்பி சுஜித் கோவை பயிற்சி மையத்துக்கும், சேலம் வடக்கு உதவி கமிஷனர் சரவணன் கிருஷ்ணகிரி சப் டிவிஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

மேலும் ராமநாதபுரம் திருவிடந்தை சப் டிவிஷன் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், பட்டுக்கோட்டை சப் டிவிஷனுக்கும், சென்னை கியூ பிரிவு டிஎஸ்பி அருள் சந்தோஷ் முத்து மாதவரம் உதவி கமிஷனராகவும், மாநில உளவுத் துறை டிஎஸ்பி சிவராஜன் சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு தலைமையிட டிஎஸ்பியாகவும், அங்கிருந்த கரியப்பா சென்னை (வடக்கு) உளவுத் துறை டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பேஸ்புக் மூலம் கரோனா நிதி திரட்டும் எஸ்.பி. பாலசுப்ரமணியம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.