ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 457 பேருக்குக் கரோனா தொற்று உறுதி

author img

By

Published : Feb 18, 2021, 11:05 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 457 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 46 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

tamilnadu corona update
tamilnadu corona update

மக்கள் நல்வாழ்வு துறை இன்று(பிப்.18) வெளியிட்டுள்ள தகவலின் படி, தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 50 ஆயிரத்து 944 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 454 நபர்களுக்கும், தமிழ்நாட்டிற்கு மகாராஷ்டிராவில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், பிகாரில் இருந்து வந்த ஒருவருக்கும் என 457 நபர்களுக்கு இன்று (பிப்.18) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 46 ஆயிரத்து 937ஆக அதிகரித்துள்ளது.
தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 4,173 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 470 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 320ஆக அதிகரித்துள்ளது. இன்று தனியார் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகளும் என மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 444 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - : 2,33,936

கோயம்புத்தூர் - : 55,319

செங்கல்பட்டு - : 52,310

திருவள்ளூர் - : 43,961

சேலம் - : 32,620

காஞ்சிபுரம் - : 29,405

கடலூர் - : 25,095

மதுரை - : 21,175

வேலூர் - : 20,910

திருவண்ணாமலை - : 19,450

தேனி - : 17,138

தஞ்சாவூர் - : 17,942

திருப்பூர் - : 18,198

விருதுநகர் - : 16633

கன்னியாகுமரி - : 17,004

தூத்துக்குடி - : 16,331

ராணிப்பேட்டை -: 16,200


திருநெல்வேலி - : 15,684

விழுப்புரம் - : 15,242

திருச்சிராப்பள்ளி - : 14,901

ஈரோடு - : 14,675

புதுக்கோட்டை - : 11,627

கள்ளக்குறிச்சி - : 10,903

திருவாரூர் - : 11,299

நாமக்கல் - : 11,761

திண்டுக்கல் - : 11,393

தென்காசி - : 8,501

நாகப்பட்டினம் - : 8,559

நீலகிரி - : 8,297

கிருஷ்ணகிரி -: 8;127

திருப்பத்தூர் - : 7,621

சிவகங்கை -: 6,739

ராமநாதபுரம் - : 6,447

தருமபுரி - : 6,639

கரூர் - : 5,480

அரியலூர் - : 4,717

பெரம்பலூர் - : 2,281




























ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.