ETV Bharat / state

'முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு' விண்ணப்பிங்க!

author img

By

Published : Nov 7, 2019, 2:37 PM IST

சென்னை: தமிழ் மென்பொருட்கள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் "முதலமைச்சர் கணினி தமிழ் விருது" வழங்கப்பட்டு வருவதையடுத்து, அதற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TN Govt

கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருட்கள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் "முதலமைச்சர் கணினி தமிழ் விருது" வழங்கப்படும் என்று சட்ட பேரவையில் தமிழுநாடு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். விருதோடு ஒரு லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்க பதக்கம், தகுதியுரை உள்ளிட்டவை வழங்கப்படும்.

அதன்படி இந்தாண்டுக்கான "முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு" தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருட்கள் 2016, 2017, 2018ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் மற்றும் விதி முறைகளை www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை - 08.

விண்ணப்பங்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 28190412 / 044 - 28190413 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: 245 ஏரிகளை தூர்வார தமிழ்நாடு அரசு திட்டம்!

Intro:Body:கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருட்களை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் கணினி தமிழ் விருது வழங்கப்படும். அதோடு ஒரு லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்க பதக்கம், தகுதியுரை வழங்கப்படும் என சட்ட பேரவையில் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இந்தாண்டுக்கான முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு தனியாள் மற்றும் நிறுவனத்திடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதுக்கு அனுப்ப பட உள்ள மென்பொருட்கள் 2016, 2017, 2018 ஆம் ஆண்டு தயாரித்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் விதி முறைகளை www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை - 08. விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 28190412 / 044 - 28190413 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.