ETV Bharat / state

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு...

author img

By

Published : Aug 22, 2022, 6:48 PM IST

தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் வாரியம் வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Pollution Control Board  guidelines for ganesh chaturthi  Tamil Nadu Pollution Control Board issue guidelines for ganesh chaturthi  விநாயகர் சிலைகளை நீர் நிலைகளின் கரைப்பதற்கான வழிமுறைகள்  விநாயகர் சிலை  தமிழ்நாடு சுற்றுச்சூழல் வாரியம்
விநாயகர் சிலை

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தைத் தருகிறது.

நீர் நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினைக் கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து , சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்களுக்கு சில வேண்டுகோள் விடப்படுகிறது.

1. களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளைப் பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

4. நீர் நிலைகள் மாசுபடுவதைத்தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் / பந்தல்கள்களை அலங்கரிக்கப் பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மட்காத சாயம் / எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படை மாற்றாகப் பயன்படுத்தக்கூடாது. வண்ணப்பூச்சுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த / மட்கக் கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

5. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்குப் பதிலாக, இயற்கைப்பொருட்கள் மற்றும் இயற்கையில் செய்யப்பட்ட அலங்கார சாயங்களால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

6. விநாயகர் சிலைகள் உள்ள இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவினை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடு வாரியத்தின் மாசு சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அனைத்து சமூகத்தினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கான அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.