ETV Bharat / state

ரூ.270.15 கோடி மதிப்பில் புதிய குடியிருப்புகள் - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

author img

By

Published : Jun 10, 2022, 2:22 PM IST

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகள் பணி ஆணைகள் மனைகளுக்கு கிரைய பத்திரங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

ரூ.270.15 கோடி மதிப்பில் புதிய குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.270.15 கோடி மதிப்பில் புதிய குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (10.6.2022) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.270.15 கோடி மதிப்பீட்டில் 9 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 2707 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சென்னையில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.41.20 கோடி மதிப்பீட்டில் தூண் தளம் மற்றும் 9 தளங்களுடன் 324 புதிய குடியிருப்புகள், ஆர்-3 காவல் நிலையம் திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.10.44 கோடி மதிப்பீட்டில் தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன் 80 புதிய குடியிருப்புகள்; வியாசர்பாடி டி.டி பிளாக் திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.60.60 கோடி மதிப்பீட்டில் தூண் தளம் மற்றும் 13 தளங்களுடன் 468 புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

திருச்சிராப்பள்ளி கல்மந்தை திட்டப்பகுதியில் ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் 192 புதிய குடியிருப்புகள்; அரியலூர் கீழப்பழுவூர் திட்டப்பகுதியில் ரூ.48.98 கோடி மதிப்பீட்டில் 576 புதிய குடியிருப்புகள்; தேனி வடவீரநாயக்கன்பட்டி பகுதி-2 திட்டப்பகுதியில் ரூ.16.33 கோடி மதிப்பீட்டில் 175 தரைதள இரட்டை குடியிருப்புகள், திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பகுதி – I திட்டப்பகுதியில் 480 புதிய குடியிருப்புகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

நாமக்கல் அணைப்பளையம் திட்டப்பகுதியில் ரூ.18.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 208 புதிய குடியிருப்புகள், நீலகிரி கடசனக்கொல்லி திட்டப்பகுதியில் ரூ.17.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 204 தனி வீடுகள், என மொத்தம் ரூ.270.15 கோடி மதிப்பீட்டிலான தமிழ்நாடு நகர்ப்பற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ள 9 திட்டப்பகுதிகளில் 400 சதுர அடி பரப்பளவுக்கு குறையாமல் ஒவ்வொரு குடியிருப்புகளும் அமைந்துள்ளது. இக்குடியிருப்புகள் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. அனைத்து குடியிருப்பு வளாகங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மின் தூக்கிகள், சிறுவர் பூங்கா, மின்னாக்கிகள் மற்றும் தீயணைப்பு வசதிகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் 4,880 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 761 பகுதிகளில் வசிக்கும் 23,826 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.500 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான 718 கிரையப் பத்திரங்களும், மனைகளுக்கான 220 கிரையப் பத்திரங்களும், என 938 பயனாளிகளுக்கு கிரயப் பத்திரங்களை முதலமைச்சர் வழங்கினார்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம்;ஓய்வு நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.