ETV Bharat / state

தேர்தல் பிரச்சாரம் செய்ய ஓபிஎஸ்சுக்கு அழைப்பு? - தமிழ்மகன் உசேன் பதில்

author img

By

Published : Feb 7, 2023, 10:30 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் செய்ய ஓபிஎஸ்சை அழைப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் செய்ய ஓபிஎஸ்சுக்கு அழைப்பு? - தமிழ்மகன் உசேன் பதில்
தேர்தல் பிரச்சாரம் செய்ய ஓபிஎஸ்சுக்கு அழைப்பு? - தமிழ்மகன் உசேன் பதில்

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பில் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதிலும், உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் அளித்த இடையீட்டு மனு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேட்பாளர் ஒப்புதல் படிவத்தை அனுப்பினார்.

இதனையடுத்து அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஏ மற்றும் பி படிவங்கள் அடங்கிய ஆவணத்தை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பதற்காக தமிழ்மகன் உசேன் நேற்று (பிப்.6) டெல்லி சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தார்.

அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்மகன் உசேன், “ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சுற்றறிக்கை மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்கின்ற பணியை மேற்கொண்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற வேட்பாளரை தேர்வு செய்து, பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்குச் சீட்டு படிவத்தின் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளோம்.

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மறுபடியும் தர்மமே வெல்லும்’ என்றதன் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை பெறும்படி தேர்தல் ஆணையம், அவைத்தலைவர் என்கின்ற பொறுப்பை, உரிமையை எனக்குத் தந்து வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியை வழங்கிய நிலையில், அந்த ஆவணங்களை ஒப்படைப்பதற்காக டெல்லி சென்று திரும்பி உள்ளோம்.

இது தேர்தலில் வெற்றி முகாமிற்கான முதல் படியாக கருதுகிறோம். நிச்சயமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, சுற்றறிக்கை மூலம் வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்ற தீர்ப்பின்படி முறைப்படி நடத்தியுள்ளோம்.

மேலும் இடைக்கால பொதுச் செயலாளர் ஆலோசனைப்படி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசுவை முறையாக நிறுத்தி இருக்கிறோம். தேர்தல் பிரச்சாரத்துக்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுப்பது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Erode East By election: அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.