ETV Bharat / state

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ் - தமிழ்நாடு அரசு அதிரடி

author img

By

Published : May 21, 2021, 5:16 PM IST

Updated : May 21, 2021, 7:46 PM IST

ஸ்டாலின்
ஸ்டாலின்

17:13 May 21

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ் - தமிழ்நாடு அரசு அதிரடி
ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ் - தமிழ்நாடு அரசு அதிரடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிரான வன்முறை குறித்த அறிக்கையை 14.05.2021அன்று அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணையின் இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது.  

அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் பின்வருமாறு:

  • மத்திய குற்ற புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பதியப்பட்ட வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள்  அனைத்தும் பெறப்படும்.
  • 22.05.2018அன்று நடந்த சம்பவத்திற்கு முன்னர், இந்தப் போராட்டம் தொடர்பாக பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
  • காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும் பலருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி, அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர, ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச் சாலையிலேயே இறந்துவிட்டபடியால், வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும்.
  • ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் இப்போராட்டத்தின்போது தமிழ்நாடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நபர்களின் உயர் கல்விக்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும் தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.                                                                                                                                                      இதையும் படிங்க: 'முதலமைச்சருக்கு நன்றி' - ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் உருக்கம்!
Last Updated :May 21, 2021, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.