ETV Bharat / state

TN Pongal Gift: நாளை முதல் டோக்கன் விநியோகம்!

author img

By

Published : Dec 26, 2022, 10:03 AM IST

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு ரூ.1000 ரொக்கம்
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு ரூ.1000 ரொக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த வருடம் கரும்பு உடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை அரசு வழங்கியது.

ஆனால், வரும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற பயனாளிகளுக்கு டோக்கன் நாளை(செவ்வாய்கிழமை) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை வரும் 2-ஆம் தேதி சென்னையில் முதலமைச்சரும், அன்றைய தினமே மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கவனக்குறைவால் ஏற்படும் நிதி இழப்பை அரசு அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும்- நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.