ETV Bharat / state

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தாய், மகன் உள்ளிட்டோர் கைது

author img

By

Published : Oct 29, 2022, 2:13 PM IST

ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மகன், தாய், உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து 16 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வீட்டின் உரிமையாளர்(34), அவரது தாயார்(65), அவரது அக்கா(36) ஆகியோர் வசித்து வருகின்றனர். வீட்டின் உரிமையாளருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி மனைவிகள் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் மகன், தாய், அக்கா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டு உரிமையாளரின் அக்கா, வாடகை வீட்டில் வசித்து வரும் பெண்ணின் 16 வயது மகளை தனது தம்பிக்கு திருமணம் செய்துவைக்க பெண் கேட்டுள்ளார். இதற்கு பெண்ணின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் தாயார் வேலைக்கு சென்றபோது வீட்டில் தனிமையாக இருந்த சிறுமியை மிரட்டி வீட்டின் உரிமையாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுபோல் பலமுறை உரிமையாளர் சிறுமையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாதபோது உரிமையாளரின் அக்கா தனது ஆண் நண்பர்கள் மூன்று பேரிடம் 3,500 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததை தாயிடம் கூறியுள்ளார்.

பின்னர் தாய் சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டதில், சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. மேலும் நடந்ததை சிறுமி தாயாரிடம் கூறவே இந்த கொடுமை தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வீட்டின் உரிமையாளர், அவரது தாய், அவரது அக்கா, அக்காவின் ஆண் நண்பர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரம்: தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.