ETV Bharat / state

போராட்டத்தின்போது 46 இடைநிலை ஆசிரியர்கள் மயக்கம்

author img

By

Published : Dec 29, 2022, 9:25 AM IST

சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடி வரும் 46 இடைநிலை ஆசிரியர்கள் மயக்கமடைந்தனர்.

போராட்டத்தின்போது 46 இடைநிலை ஆசிரியர்கள் மயக்கம்
போராட்டத்தின்போது 46 இடைநிலை ஆசிரியர்கள் மயக்கம்

போராட்டத்தின்போது 46 இடைநிலை ஆசிரியர்கள் மயக்கம்

சென்னை: இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பதே இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் ஒற்றை கோரிக்கையாக இருக்கிறது. கொட்டும் பணியையும் பொருட்படுத்தாமல் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற தொடர்ந்து போராட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக எதிர்க்கட்சி ஆக இருந்த பொழுது இவர்களின் கோரிக்கையை தீர்க்கப்படும் என நேரில் சென்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவாதம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு களையப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 27 ஆம் தேதி 3 ஆவது நாளாக உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் உடல் நேற்று (டிச.28) பாதிக்க தொடங்கியது. 29ஆம் தேதி காலைவரை 36 பேர் மயங்கியதைத் தொடர்ந்து மருத்துவமனையிலும், உண்ணாவிரதப் போராட்ட களத்தில் எட்டு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2009 மே 31 ஆம் தேதி வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அதாவது 2009 ஜூன் 1 ஆம் தேதி முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 எனக் குறைத்து நிர்ணயிக்கப்படுகிறது.

அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைகிறது. ஒரே நிலையில் கற்பித்தல் பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாட்டுடன் ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. ஊதிய முரண்பாட்டை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் பத்தாண்டுகளாக போராடி வருகின்றனர். முந்தைய ஆட்சியில் இருமுறை உண்ணாவிரதம் இருந்தனர்.

இதையும் படிங்க: சிம்பிளாக மாமல்லபுரத்திற்கு விசிட் அடித்த கூகுள் சிஇஓ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.