ETV Bharat / state

தொடர் மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

author img

By

Published : Nov 30, 2021, 6:46 AM IST

Updated : Nov 30, 2021, 9:33 AM IST

தமிழ்நாட்டில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 30)  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இன்னும் ஒருசில நாள்களுக்குக் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

  • தூத்துக்குடி
  • திருவள்ளூர்
  • மதுரை
  • சிவகங்கை
  • திண்டுக்கல்

ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

  • காஞ்சிபுரம்
  • செங்கல்பட்டு
  • திருநெல்வேலி
  • தேனி
  • கடலூர்
  • ராமநாதபுரம்
  • நீலகிரி
  • திருப்பூர் (தாராபுரம், உடுமலைப்பேட்டை)

ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருவாரூர் மழை: தனித் தீவாக மாறிய கிராமம்

Last Updated :Nov 30, 2021, 9:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.