ETV Bharat / state

பாரதத்தை உருவாக்கியது சனாதன தர்மம் தான் ; ராணுவம் அல்ல - ஆளுநர் ரவி பேச்சு

author img

By

Published : Jun 11, 2022, 11:08 PM IST

சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து கஜினி முகமது உருவாக்கிய காந்தகார், பெஷாவர் போன்ற நகரங்களை அமெரிக்கா குண்டுகளால் தகர்த்தன என்றும் இதிலிருந்தே சனாதன தர்மத்தின் வலிமையை தெரிந்துகொள்ளலாம் எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

சனாதன தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியது - ஆளுநர் ரவி பேச்சு
சனாதன தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியது - ஆளுநர் ரவி பேச்சு

சென்னை: சபரிமலை ஐயப்பனுக்கு மிகவும் நெருக்கமான பாடலாக பார்க்கப்படும் ஹரிவராசனம் பாடல் எழுதப்பட்டு நூறு வருடங்கள் ஆகும் நிலையில். சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தற்போது நாம் கேட்டுக் கொண்டிருக்கும் ஹரிவராசனம் பாடல் கேஜே ஜேசுதாஸ் பாடப்பட்டு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அப்பாடல், 1923ஆம் வருடம் கோணக்காட்டு ஜானகி அம்மாவால் எழுதப்பட்டது.

இசைஞானி இளையராஜா நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் நூற்றாண்டு விழா குழுவில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாடகி சித்ரா, நடிகர் ஜெயராம், பி வாசு, நடிகர் அஜய் தேவ்கன், கணக்காளர் குருமூர்த்தி, ஓய்வு பெற்ற நீதிபதி குமார், வள்ளிநாயகம் உள்ளிட்டோர் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஐயப்ப பக்தர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, "ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். ஒரே பரமேஸ்வரன், ஒரே கடவுள். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதே தான் நமது மார்க்கம் கூறுகிறது. மனிதர்களுக்கு மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் வழிபாடு என்பது அவசியமாகிறது.

இந்திய அரசியலமைப்புதான் நமது ஆன்மா. வேற்றுமையில் ஒற்றுமை என நாம் நம்மை பற்றி கூறுகிறோம். அதை தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது இந்திய அரசியலமைப்பு, சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. கிமு 2ஆம் நூற்றாண்டில் புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவை.

சனாதன தர்மம்தான் பாரதத்தை உருவாக்கியது. நமது நாட்டின் எண்ணம் செயல் போன்றவற்றில் சனாதானம் உள்ளது. ஒரே பரமேஸ்வரா என சனாதன தர்மம் சொல்கிறது. அந்த பரமேஸ்வரன் தான் உலகத்தை படைக்கிறார், நம் வேற்றுமையில் வாழ்கிறார் என கூறப்படுகிறது. ஒரு மரம் என்றால் அதில் எண்ணற்ற இலைகள் உள்ளது. அந்த இலைகளுக்கும் மரத்திலிருந்து சத்துக்கள் செல்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்திய அரசியலமைப்பின் சாராம்சமாக உள்ளது. இந்திய அரசியல் அமைப்புதான் அரசிற்கு ஆதாரமாகவும் ஆன்மாவாகவும் உள்ளது. பாரதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது. அப்போதே நமது அரசியல் அமைப்பும் எழுதப்பட்டுவிட்டது. "ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி" என அத்வைத தத்துவங்கள்ல கூறுகின்றன.

மற்ற நாடுகளைப் போல ராணுவ வீரர்கள், அரசர்கள் மூலம் இந்த நாட்டை உருவாகவில்லை. இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது. கடவுள் மனிதனைப் படைத்தார் எனும் தத்துவத்தை இந்து மதம் சொல்லவில்லை. இந்தியாவில் ராணுவம் பொருளாதாரத்தில் வளர்ச்சியை போல ஆன்மீகத்தில் வளர்ச்சி அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். காலநிலை மாற்றத்திற்கு எந்த நாடுகளும் முன்னேற்பாடுகள் செய்யாத நிலையில், அதை தடுப்பதற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளது.

இந்தியா இந்தியாவின் வல்லரசு நாடாக வளர்ந்து வரும் நிலையில் அதன் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டதாகவும் இருக்கவேண்டும். தற்போது வலிமையான தலைமை இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியான ஆன்மீகத்தில் வளர்ச்சி இந்த தேசத்தின் வளர்ச்சி ஆகும்

சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து காந்தகார் பெஷாவர் போன்ற நகரை கஜினி முகமது உருவாக்கினார். ஆனால், அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் சனாதன தர்மத்தின் வலிமை" என பேசினார்.

இதையும் படிங்க: திமுக பாஜகவின் பி டீம் இல்ல... அவங்கதான் மெயின் டீம் - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.