ETV Bharat / state

'கரோனா காலத்திலும் ரூ.24,500 கோடி முதலீடு, 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு' - எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Dec 14, 2020, 3:18 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 24 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் 54 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Edappadi palanisamy
Edappadi palanisamy

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தொழில் துறை சார்பில் 19,995 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26,509 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த முதலீடுகள் மின்சார வாகனங்கள், சூரிய மற்றும் காற்றாலை சக்தி, மருந்துப் பொருள்கள், நகர எரிவாயு , இணைய வழி கல்வி, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், ரூ.4,456 கோடி முதலீடு மற்றும் 27,324 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் ஐந்து நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதுதவிர, 47 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 385 நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் தனியார் நிறுவனத்தின் திட்டம் ஒன்றையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீட்டில் 54 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மின்சார வாகன துறையில் பெருமளவில் காலடித்தடம் பதித்திருக்கும் Ola Electric Mobility நிறுவனம், சமீபத்தில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த Etergo BV என்ற நிறுவனத்தை வாங்கியிருந்தது. இந்நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மின்சார இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக 2,354 கோடி ரூபாயை அந்நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் 2,182 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

அதேபோல சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நகர எரிவாயு விநியோக வலையமைப்பினை நிறுவ Torrent Gas Chennai என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ. 5,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

'கரோனா காலத்திலும் ரூ.24,500 கோடி முதலீடு, 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு' - எடப்பாடி பழனிசாமி

அமெரிக்காவின் First Solar நிறுவனம் Advanced Thin Film Photovoltaic என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, Thin Film Photovoltaic Solar Modulesகளை உலகளவில் அதிகம் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். சூரிய ஒளியில் இருந்து சோலர் மின்சக்தியை உருவாக்குவதில் இந்த Modulesகளின் பங்கு முக்கியமானது.

இந்நிறுவனம் 4,185 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் 1,076 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல 18 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: டாடா வசமாகும் ஏர் இந்தியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.