ETV Bharat / state

"தமிழ்நாட்டிற்கு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது" - ராமதாஸ் கண்டனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 3:37 PM IST

தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தீர்ப்பையாவது பெற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கைில் கூறியிருப்பதாவது, "கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நேற்றுடன் நிறுத்திவிட்டது. காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 24ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் 12ஆம் நாள் வரை விநாடிக்கு 5ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆணையிட்டிருக்கிறது. ஆனால், இவை எதையுமே மதிக்காமல் தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், "காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற அடுத்த 20 நாள்களுக்கு குறைந்தது ஒரு டிஎம்சி வீதம் 20 டிஎம்சியாவது தண்ணீர் தேவை. கர்நாடக அணைகளில் 64 டிஎம்சி தண்ணீர் இருக்கும் நிலையில், அம்மாநில அரசு நினைத்தால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கி குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால், உள்ளூர் அரசியலுக்கு அஞ்சியும், தூண்டிவிடப்பட்டு நடக்கும் போராட்டத்திற்கு பயந்தும், சிறிதும் மனித நேயமின்றி தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.

  • காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்: உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தீர்ப்பையாவது பெற வேண்டும்!!

    கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நேற்றுடன் நிறுத்தி விட்டது.…

    — Dr S RAMADOSS (@drramadoss) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராவிட்டால் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியாது. இதை உணர்ந்து கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீர் பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதுவுமே செய்யாமல் அமைதி காப்பதால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் விளையாது. காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

அதுவரை காத்திருந்தால் குறுவை பருவ நெற்பயிர்கள் முற்றிலுமாக கருகி விடும். எனவே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவசரமாக அணுகி, இந்த வழக்கில் 21-ஆம் தேதி விசாரணை தொடங்கும் வரை, இடைக்கால ஏற்பாடாக வினாடிக்கு 15ஆயிரம் கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: "நம்பிக்கையின்மையை அகற்ற மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிப்போம்"- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்னுரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.