ETV Bharat / state

"திமுக அரசு விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது" - பி.ஆர் பாண்டியன் ஆவேசம்!

author img

By

Published : Mar 24, 2023, 7:42 AM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய குழுக்களை அவமதித்து விட்டார் என்றும் பாஜக அல்லாத 11 மாநில முதலமைச்சர்கள் சந்திப்பு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளதாகவும், தற்போதைய தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என்றும் பி.ஆர் பாண்டியன் தெரிவித்தார்.

"திமுக அரசு விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது":பி.ஆர் பாண்டியன் ஆவேசம்

சென்னை: மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது, "டெல்லியில் விவசாயிகள் போராடிய போது பிரதமர் மோடி அழைத்து பேச மறுத்து வந்தார். போராட்டத்தை எதிர் கொள்ள முடியாத நிலை வந்த போது, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுகிறேன். மேலும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டம், விவசாயிகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.

ஒராண்டு நிறைவு பெற்றாலும் இதுவரை உத்தரவாதங்களை நிறைவேற்ற பிரதமர் முன் வரவில்லை. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. விவசாயிகளை அடிமைப்படுத்தி ஏமாற்றுகின்ற வேலையாக பிரதமரின் செயல்பாடு உள்ளது. இனியும் கால தாமதம் செய்யக் கூடாது பாஜக அல்லாத 12 மாநில முதலமைச்சர்களை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரியில் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநில முதலமைச்சர்களை சந்திக்க அனுமதி பெறப்பட்டு, 5 முதலமைச்சர்கள், 2 துணை முதலமைச்சர்கள் என சந்தித்து உள்ளோம். அவர்கள் எங்களுக்கு மிகுந்த வரவேற்பு கொடுத்தனர்.

ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் எங்களை அவமதித்தது மட்டுமில்லாமல் குழுவில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த 9 பேரும் மிகுந்த அவமானத்திற்குள்ளாக்கினர். அவருக்கு எங்களை சந்திக்க மறுப்பு இருந்திருந்தால், எங்களுக்கு தெரிவித்திருக்கலாம், ஆனால் எங்களை அண்ணா அறிவாலயத்தின் வாசலிலேயே காக்க வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சரை தவிர மற்ற 11 மாநில முதலமைச்சர்கள் விவசாய குழுவிற்கு முழு ஆதரவு தந்தனர்.

பிரதமர் அலுவலகத்திலும் கடிதம் தந்து வலியுறுத்தி வந்து உள்ளோம். குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரை சந்திக்க வேண்டும் என முடிவு செய்யவில்லை. நாங்கள் எதிர்பார்த்தை விட மாநில முதலமைச்சர்கள் நம்பிக்கை ஏற்படும் வகையில் உத்தரவாதம் தந்துள்ளார்கள். பிரதமர் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தவறினால் நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள் ஒன்று கூடி பிரதமருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் ஒரு காகித பட்ஜெட். தமிழ்நாடு விவசாயிகள் பிரச்னைகளை திசை திரும்பும் வகையில் மூடி மறைத்து நிதி ஒதுக்கீடு இல்லாத ஒரே மாதிரியான பட்ஜெட்டை 3 ஆண்டுகளாக மாறி மாறி படிக்கின்றார்கள். இந்த பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் தராது. திமுக தேர்தல் அறிக்கையில் கரும்பு டன்னுக்கு ரூ.4,000 தருவதாக கூறினார்கள். ஆனால் அதை தர மறுத்துவிட்டு உற்பத்திக்கான மூலதனத்தை கணக்கில் கொள்ளாமல் சிறப்பு மண்டலங்கள், ஆராய்ச்சி கூடம் அமைப்பேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல.

இந்த பட்ஜெட் விவசாயிகளின் எதிர்பார்ப்பிற்கு முரணாக உள்ளது. முதலமைச்சர் இனி ஏமாற்ற முடியாது. அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கும்பகோணம் அருகே உள்ள சக்கரை ஆலை உரிமையாளர் ரூ.600 கோடியை விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி மோசடி செய்து உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்து உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஆனால் திமுக ஆட்சியில் சக்கரை ஆலையை அரசுடைமை ஆக்கப்படும் என கூறிவிட்டு அதிகார பலத்துடன் வாங்கிவிட்டு விவசாயிகளை காவல்துறையை வைத்து மிரட்டுகின்ற நிலைமை தான் உள்ளது.

பரந்தூர் விமான நிலையம் என்ற பெயரில் 13 ஏரிகளை அழிக்க முயற்சி நடக்கிறது. வீராணம் ஏரியில் நிலத்தையும் எடுக்க திமுக அரசு அனுமதித்து உள்ளது. நெய்வேலி நிலம் எடுப்பதாக விவசாயிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள். ஜி20 மாநாடு நடத்தி வளங்களை அழிக்கிறார்கள். சிறு மலை கணிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகிறது. விவசாயிகள் குடிமராமத்து பணிகள் செய்து வந்தனர். குடிமராமத்து பணிகளை கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைத்து தமிழ்நாடு முழுவதும் ஒரே தனி நபருக்கும் மட்டும் அனுமதித்தனர். திமுக அரசு விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 2 ஆண்டு சிறை.. எம்.பி. பதவிக்கு ஆபத்தா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.