ETV Bharat / state

தொடர்ந்து 41வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

author img

By

Published : May 17, 2022, 6:48 AM IST

சென்னையில் தொடர்ந்து 41வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85, ஒரு லிட்டர் டீசல் ரூ.100.94 க்கும் விற்கப்படுகிறது.

தொடர்ந்து 41வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
தொடர்ந்து 41வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

அதன்படி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85க்கும், டீசல் விலை ரூ.100.94க்கும் விற்பனை விற்பனையாகி வருகிறது.

சென்னையில் பெட்ரோல், டீசல் 41ஆவது நாளான இன்றும் (மே17) விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மே 1ஆம் தேதி கமர்ஷியல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. மேலும், மே 6ஆம் தேதி சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. அதன்பின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

  • டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41க்கும், டீசல் விலை ரூ.96.67க்கும் விற்பனையாகிறது.
  • மும்பையில் பெட்ரோல் விலை ரூ.120.51க்கும், டீசல் விலை ரூ.104.77க்கும் விற்பனையாகிறது.
  • கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.115.12க்கும், டீசல் விலை ரூ.99.83க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: நல்லெண்ணெய் விலை இவ்வளவா? அதிர்ச்சியில் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.